Category Archives: ஞான முத்துக்கள்

ஞானம்


டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீக குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண்டிருந்தார். பணி சாதாரணமானதென்றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணியால் துடைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் டால் மில்மன் கேட்டார். “சாக்ரடீஸ், அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்?”.

சாக்ரடீஸ் சொன்னார். “காரை எப்படித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்”

எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.

பல்லி விழும் பலன்

பல்லி விழும் பலன்

********************************

பல்லி விழும் பலனை நம்பலாமா?” என நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கான விடை இதோ.

நாட்காட்டிகள், பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் பல்லி விழும் பலன் பொதுவாக இருக்கும். பெரும்பாலானோர்களும் அதைத் தவறாது பார்த்து மனதைக் குழப்பிக்கொள்வது வழக்கமாகி விட்டது.

உறுப்பு இடம் வலம் உறுப்பு இடம் வலம்
தலை துன்பம் கலகம் நெற்றி கீர்த்தி லக்ஷ்மிகரம்
வயிறு மகிழ்ச்சி தானியம் முதுகு கவலை நஷ்டம்
கண் பயம் சுகம் தோல் வெற்றி வெற்றி
பிருஷ்டம் செல்வம் சுகம் கபாலம் வரவு வரவு
கணுக்கால் பயணம் செலவு மூக்கு கவலை வியாதி
மணிக்கட்டு கீர்த்தி பீடை தொடை சஞ்சலம் சஞ்சலம்
நகம் நஷ்டம் செலவு காது லாபம் ஆயுள்
மார்பு சுகம் லாபம் கழுத்து வெற்றி பகை

 

இது எவ்வளவு பலிக்கிறது என்றால் யாருக்கும் தெரியவில்லை.

இன்னுமொன்றும் சொல்கின்றனர். பல்லி ஏறினால் – ஜெயம், வெற்றி; இறங்கினால் – தோல்வி. ஆகவே கூகுளில் தேடியபோது கிட்டியவை:

 

Jothida Rathna K.Vidyatharan

பல்லிக்கு ஒலி எழுப்பும் சக்தி உள்ளது. ஊர்வன வகைகளில் இதுபோல் ஒலி எழுப்பும் சக்தி மற்ற உயிரினங்களுக்கு கிடையாது. இயற்கையின் சூட்மத்தை உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.

பறவைகளில் கிளி மிகவும் நுணுக்கமானது. ஆன்மிகத்தில் கிளி, கருடன், மயில் ஆகியவற்றிற்கு சிறப்பம்சம் உண்டு. அவை தெய்வங்களின் வாகனமாக கருதப்படுவதால் அவற்றையும் வழிபடுகிறோம். அந்த வகையில் பல்லிக்கும் சில சிறம்பங்கள் உண்டு.

எனவேதான் அதன் சத்தத்திற்கும், அது மேலே விழுவதால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்றபடி வரலாற்றுப் பதிவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரியவில்லை.

ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது.

நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை.”

 

பல்லி விழும் பலனை ஏன் நம்பவேண்டும் என்பதற்கு சரியான விளக்கமில்லை.

 

கரிசக்காடு உதயசங்கர்

சுவரில் பறந்து வந்து ஒட்டுகிற சிறு பூச்சிகளை நோக்கி வேகமாகப் போகும் போது எப்போதாவது அதன் பிடிமானம் தவறாதா? அப்படி அதன் நிலை தவறிக் கீழே விழும்போது மனிதர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது தானே விழும். அதற்குப் பல்லி பொறுப்பாக முடியுமா? அப்படி விழும்போது, சரி இவன் காலில் விழுவோம் என்றோ, அவன் தலையில் விழுவோம் என்றோ, இன்னொருத்தன் கையில் விழுவோம் என்றோ முடிவு செய்தா விழும்?

சரி எங்கே விழுந்தாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்கிற பதட்டம் தானே அதுக்கு இருக்கும். பாவம் அதைப் போய் தலையில் விழுந்தால் கலகம், நெற்றியில் விழுந்தால் பதவி என்று மனிதர்களுடைய உறுப்பு வாரியாகப் பலன் எழுதியிருக்கிறார்களே! வேடிக்கையாக இல்லை.

எங்கே விழுந்தாலும் பாவம் பல்லி. இசகு பிசகா விழுந்துட்டா பல்லியல்லவா செத்து விடும். ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாத ஒரு காரியம் ஒரு பல்லி தன்னுடைய கீச்சுக் குரலில் கத்துவதால் மட்டும் நடந்து விடுமா? யோசித்துப் பாருங்கள்.

இவரின் வாதம் சிந்திக்க வைக்கிறது.

நண்பர் KRS தன் வலைத்தளத்தில் பல்லி சத்தமிடுவதை நம்புவது சங்க காலத்தில் இருந்தது எனத் தரும் ஆதாரம் கீழே:

Kannabiran Ravi Shankar (KRS)

சங்கத் தமிழில் மூட நம்பிக்கை

கலித்தொகை11 (lines 4-22)

பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே
….
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே!

 

அதோ, பல்லியும் சத்தம் போடுது; என் மனசை ஒத்து இசைக்குது!
மையை உண்ணும் என் இடக் கண்ணும் துடிக்குதுடீ!
அவன் வந்துருவான், வந்துருவான்!

வந்தானா இல்லையா. அது அடுத்த கேள்வி.

என்னதான் சொன்னாலும், “எது எது எப்படியிருக்கணுமோ, அது அது அப்படியே தான் இருக்கு“. பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது நினைவுக்கு வருகிறது:

உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் நம்பி ஒத்துக்கொள்ளும் *****முன்னால் கதறி என்ன; புலம்பி என்ன தோழா. ரொம்ப நாளா.”

இன்னுமா இதையெல்லாம் நம்புகிறீர்கள்.

69.கைகாட்டி மரம்

நான் ஒரு கைகாட்டி மரம்

***************************

ஞானத்தின் வழி செல்ல நினைப்போருக்கு ஒரு சில வார்த்தைகள்:

இறைவன் ஒன்றே; உருவற்றவன். அவனுக்குச் சாத்தப்பட்ட குணநலன்களை வைத்து அவன் நம் உடலில் எங்கு உள்ளான் எனத் தெரிந்துகொள்வது முதல் படி. என் அநுபவத்தில் புரிந்தது:

சிவன் = சீவன் = ஆன்மா

சக்தி = kinetic&potential = விந்து சக்தி

சிவன் இல்லாமல் சக்தி இல்லை; சக்தி இல்லாமல் சிவம் இல்லை” – விந்துவால் உருவாகிறோம். விந்து சக்தி பெருகுகிறது. வாலிபம் கிட்டுகிறது; அதை விரயம் செய்து தொலைக்கிறோம்; இறுதியில் மரணம். அப்போது மீதமுள்ள விந்துவும் வெளியாகிப் பிணமாகிறோம். விந்து சக்தி உள்ளவரை சீவன் இருக்கிறது; விந்து சக்தி வெளியானதும் பிணமாகிறோம். பிணம் நாறுகிறது;முகம் விகாரமாகிறது; உடல் வீங்குகிறது. இதுதான் அசுத்த சாவு. எவனொருவன் முறையாக ஞானப்பயிற்சி செய்து விந்தை வெளியாக்காது இறக்கிறானோ அதுவே சுத்த சாவு.

விந்துவே ஆதி.” இறக்கும்போது அத்துடன்(விந்து) கலந்தால், அதாவது சமம் ஆனால் சமாதி. சமம்+ஆதி=சமாதி.

திருமால் நம் உடலில் உள்ள முகுளம்.

பெருமா பிரம்மா நம் மனம். பிறப்புக்களை எண்ணங்களாய்ப் படைப்பவன். எண்ணங்கள் அடங்கினால் மனம் அடங்கும்.

செயலில் இறங்கவழி பிராணாயாமம்மூச்சுப் பயிற்சி

பிராணாயாமம்: – வளிப்பயிற்சி: – மூச்சுப் பயிற்சி வாசி யோகம் இவையெல்லாம் ஒன்றே.

இரேசகம்: 32 மாத்திரை அளவு

உயிர்க்காற்றை (வாசிக் குதிரையை) உள்ளே இழுத்தல்.

கும்பகம்: 64 மாத்திரை அளவு

அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.

பூரகம்: 16 மாத்திரை அளவு

அடக்கியதை மெதுவாக வெளிவிடல்.

மாத்திரை அளவு:

கண்ணிமைப் பொழுதும், கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.” – பவணந்தி

எடுத்துக் காட்டு: “சிவசிவ” – 4 மாத்திரை