Category Archives: பஞ்சபட்சி சாற்றிறம்

உரோமரிஷி பஞ்சபட்சி e-BOOK

பஞ்சபட்சி – செயல்கள் – அட்டவணை

உயா் திரு குருஜீ அவா்களே!

வணக்கம்! உங்களுடைய பஞ்சபட்சி சாஸ்திரம் நூல்கள் மிகவும் நன்றாகவும் வியப்பாகவும் உள்ளது. என் பெயா்: ரா.சுந்தர ராஜ். சிம்மராசி, மகம் நாட்சத்திரம். எனக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் படி ஆந்தை வருகிறது. பட்டம் பதவி இரவிதான் கிடைக்கும் என்றும் வருடத்தில் ஒரு தமிழ் மாதத்தில் தான் வளா்பிறை காலமான 14 நாட்கள் காாியங்கள் வெற்றியடையும் என்றும் ஒருவாிடம் உதவி கேட்டுச்செல்லவேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது என்றும் 14 நாளில் ஒரு நாள் மட்டும் ஆந்தைக்கு மரணபட்சி நாளாக அமைகிறது. அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாாியம் படுதோல்லி அடையும் என்று நூல்களில் படித்துள்ளேன் வியப்பாகவே உள்ளது. குருஜீ அவா்களே!அந்த நல்ல நாளை பயன்படுத்த விரும்புகிறேன் உதவி செய்யுங்கள் குருஜீ அவா்களே!

2014, 2015,2016, 2017, 2018,2019, 2020.

ஒவ்வோரு ஆண்டும் ஒரு தமிழ் மாதத்தில் (13 நாட்கள்) எந்த மாதம் எந்த நாள்? – குருஜீ

ஆந்தை மரணபட்சிநாள் (1 நாள்) எந்த நாள்? – குருஜீ

அரசபட்சி நேரம் (1 ½ மணி) அந்த நேரம்குருஜீ

ஆந்தை மரணபட்சிநாள் தேதி/மாதம்/வருடம்

ஆந்தை பட்சி நேரத்தை குறித்து தரும்படி மிகத் தாழ்மையுடன் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் குருஜீ அவா்களே. நன்றி நன்றி நன்றி!பிழை இருந்தால் மன்னிக்கவும். குருஜீ அவா்களே!

ரா.சுந்தர ராஜ்

துபாய்

அன்பு சுந்தரராஜ்

*******************************************

அன்பு சுந்தரராஜ்,

வணக்கம். நான் யாருக்கும் குரு அல்ல. அந்த தகுதி எனக்கில்லை. நான் ஒரு கைகாட்டி மரம்; அவ்வளவுதான். பஞ்சபட்சி செயல்களை அட்டவணையிட்டு இணைத்துள்ளேன். முடிந்தவரை அறிந்துகொள்ளுங்கள்.

படுபட்சி என்றால் அன்றைக்கு அப்பட்சி இறந்துவிடும் என்பதல்ல. அன்றும் அப்பட்சிகள் 5 தொழில்களையும் செய்யும். ஆனால் முழு வீரியத்துடன் அல்ல. எதிரிகள் இந்த நூலில் குறிப்பிட்ட “அட்டகன்மம்” என்னும் செய்(யும்)வினையை படுபட்சி நாளில்தான் செய்வார்கள். தங்களின் நட்சத்திரம், இராசி ஆகியவற்றை யாரிடமும் கூறாமலிருப்பது நல்லது.

இத்துடன் மேலதிக விவரங்களைக் கூறவியலா நிலையில் உள்ளேன். மன்னிக்கவும்.

மின் – நூல் – அகத்தியர் பஞ்சபட்சி

உரோமரிஷி பஞ்சபட்சியை மின்னூலாக்கி வலையேற்றியாயிற்று. அகத்தியர் கோபித்துக் கொள்வார் அல்லவா? அதென்ன பாவம் செய்தது?

அகத்தியர் பஞ்சபட்சி என்னும் குறுநூலையும் மின்னூலாக்கி வலையேற்றியுள்ளேன்.