Category Archives: பழமொழி நானூறு

பழமொழி நானூறு – 14.125

14. நட்பின் இயல்பு
*************************

14.125 ”ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலாக்

கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே”

விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே

நட்டாரை ஒட்டி யுழி.

பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற எருதுக்கொடியினையும் உடைய சிவபிரான் ஏற்றுக்கொண்டான். தம்முடன் நட்புக் கொண்டாரைத் தாம் கண்டபொழுது தாம் வேறு அவர் வேறு என வேறுபாடின்றிப் பழகி சுகதுக்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார்.

பழமொழி:
*************
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே”

பழமொழி நானூறு – 13.124

13.124 தேர்ந்துகண் ணோடாது தீவினையும் அஞ்சலராய்ச்

சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத் தீர்ந்த

விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்

நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?”

ஆராய்ந்து கண்ணோட்டம் செலுத்தாது தீய செயல்களுக்கு அஞ்சாதவராய் தம்மைச் சேர்ந்தோரை எல்லாம் சிறுமைபடப் பேசி நெருங்கிய உறவினருக்கெல்லாம் வெறுப்பானவைகளையே செய்யும் நரகம் புக இருக்கின்றவர்களுக்கு, அவர் உயிரைக் கொல்லும் நஞ்சு உலகில் இல்லையோ?

பழமொழி:
*************
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?”

பழமொழி நானூறு – 13.123

13.123 உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய

நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்

வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே

சுரையாழ அம்மி மிதப்பு.”

மலையிலிருந்து விழும் ஒளிவிளங்கும் அருவியை உடைய மலைநாடனே! புகழ்மிக்க குடியில் பிறந்த அறிவுமிக்கவர் வறுமையால் வருந்தி நிற்க, புகழற்ற கீழ்மக்கள் செல்வத்தால் தலை நிமிர்ந்து பெருகுதல் ஆகியன நீரிலே சுரைக்குடுவை முழுகுவதையும் அம்மி மிதப்பதையும் ஒக்கும்.

பழமொழி:
************
சுரையாழ அம்மி மிதப்பு.”