Category Archives: விவேகாநந்தர்

சிந்தனைக்கு 29 – 31

சிந்தனைக்கு 29 – 31

*******************

29. உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும் வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.

30. கொடுக்கும் சக்தி உங்களிடம் உள்ள வரையில் கொடுங்கள். அத்துடன் விட்டுவிடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே மீளும்.

31. உள்ளத்தையும் உடலையும் பற்றிய கேடுகள் அனைத்தையும் எதிர்த்து நில்லுங்கள். அதில் வெற்றி பெறும் போது நீங்கள் நினைத்த அத்தனையும் கைகூடும் வல்லமை பெற்றிடுவீர்கள்.

– விவேகாநந்தர்

சிந்தனைக்கு 26 to 28

உழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்.

தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கும்.

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காக உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால், அதன்மூலம் நீ பாக்கியம் பெற்றவனாகிறாய்.

– விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 25

25. சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான்  வெற்றிகரமான வாழ்க்கைக்குரிய முழு ரகசியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.

– விவேகாநந்தர்