Category Archives: அகத்தியர் பஞ்சபட்சி

மின் – நூல் – அகத்தியர் பஞ்சபட்சி

உரோமரிஷி பஞ்சபட்சியை மின்னூலாக்கி வலையேற்றியாயிற்று. அகத்தியர் கோபித்துக் கொள்வார் அல்லவா? அதென்ன பாவம் செய்தது?

அகத்தியர் பஞ்சபட்சி என்னும் குறுநூலையும் மின்னூலாக்கி வலையேற்றியுள்ளேன்.

அப்பாடா! அகத்தியர் – பஞ்ச பட்சி

அப்பாடா! அகத்தியர் – பஞ்ச பட்சி இனிதே முடிந்தது.

1940ல் படி எடுக்கப்பட்ட ஓலைச்சுவடியிலிருந்து என்னால் 1988ல் நாட்குறிப்பில் படி எடுக்கப்பட்டவைகளில் மிகவும் தேவையானவைகளை மட்டும் மிகுந்த உழைப்புடன் ஒரு விரலினால் கொத்தி அனுப்பி வந்துள்ளேன். மூலிகைப் படலம், அட்ட கன்ம காண்டம் ஆகியனவற்றை முயற்சி செய்து வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

அகத்தியர் – பஞ்சபட்சி 121 – 125

அகத்தியர் – பஞ்சபட்சி 121 – 125
*************************************
பட்சி பாகம்
*************
121. சேனைதிசை கனகதிசை சீரதாகச்
சிங்க திசையானை திசைப் பேசொணாத
பூனை திசையாவு திசை யெலியினோடு
பொருந்து முயற் றிசையெட்டும் பொலியும் பட்சி
மோனமென்னுஞ் சூக்ஷ திசை நாளதாக
முன்றினமே பிராண திசை யுண்மையாகப்
பானமொழி மடமாதே பட்சி பாகம்
பகர்ந்திடு வரைந்தொழிலின் பலன் கடாமே.

மகாதிசை ஆண்டு
**************************
122. உண்டி நடை யைந்தாகி லிருபத்தைந்தா
முழு தூக்கம் சாவானா லைந்தாகும்
கண்டவிரு பதினைந்து மாகக் கூட்டி
மகாதிசை நூறாண்டந்திரதி சையாந் திங்கள்
விண்டநாள் சூக்கும திசை பிராண திசைநாள்
விளங்கிய பஞ்சாங்க முறையே வல்லார்
அண்டருக்கு மேலாகு மாயுள் காணா
ரலை கடல் சூழவனியெல்லா மறிவதாமே.

123. தையிருபத்தெட்டரை மேற் தனுசு கும்பம்
தான்கால்மீன் விருச்சிகமே முக்காலாகும்
மைதுலையுமிருமுக்கால் ரிடபங் கன்னி
வருமிரண்டோ டொருகாலு மிதுனஞ் சிங்கம்
எய்யுமிரண்டே முக்கால் கடக மூன்றும்
இயம்பினது பகல் அகசு கடிகையாகும்
ஐயமதி யறுபதிலே செல்லு போக
அன்றிரவுக் குள்ளதைநீ யறிந்து கொள்ளே.

124. ஒன்றரையொன்றேகா லொன்று முக்காலரையாம்
நின்றது கையை நிலைநிறுத்தி – நன்றாக
வட்டமொக்கவே கூட்டி மாளிகைக்குள் ளேயிருந்து
தொட்ட விரனாழிகையாய்ச் சொல்.

125. சுட்டுவிரன் மடக்கி சூரியனைத் தன்வலமாய்
எட்டும் விரலை யிரட்டித்து – முட்ட
அடியளந்து பார்ப்பதன்முன் னாராய்ந்து சொல்லும்
குடியறிந் தெந்நாளுங் கூறு.

அகத்தியர் – பஞ்ச பட்சி – முற்றும்
**********************************************