சிவலிங்கம் – சில விளக்கங்கள்

நன்றி: Astro Healer Daksna Murthy

சிவலிங்கத்தின் அர்த்தம்….!!! லிங்கம் என்றால் “SYMBOL”, (or) “குறியீடு
என்று பொருள்!

இறைவனைப் பரப்பிரம்மம் என்று
சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!

* ஹீரோ போல, முருகனும் கண்ணனும்
அழகாகச் சிரித்தால் = உருவம்!
*
உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ
ஒரு சக்தி நிலை = அருவம்!
*
உருவமும் உண்டு, அருவமும் உண்டு! ()
உருவமும் இல்லை, அருவமும் இல்லை =
அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? =
அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!
உருவமாகப் பார்த்தால் இறைவனும்
மனுசனைப் போலத் தான்! கை கால் காது
மூக்குன்னு எல்லாம் கடவுளுக்கும்
இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா?

மூக்குல மூச்சு விடுவாரான்னு
நெனச்சிக்குவோம்!
உருவம்னா வெறும் மனுச உருவம் மட்டும்
தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம்
கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம்
கடவுள் இருக்க மாட்டாரா?”-ன்னு சில பேரு
குறுக்குக் கேள்வி கேப்பாங்க!

ஹிஹி! அதான் தண்டகாரண்யத்து மரமாய்,
மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய்,
வாமனராமகண்ணன்னு மனுசன்களாய் பல
உருவத்தில் இறைவனைக் காட்டினாங்க!
சரிஉருவம் பற்றிச் சொன்னீங்க! இறைவன்
அருவமாகவும் இருக்காருன்னு சொல்லிக்
கன்பூசன் பண்ணுறாங்களே!
உருவமே கெடையாதுன்னு சொல்லுறத
நம்புறதா?
உருவமா இருக்குறத நம்புறதா? எதைப்பா
நம்புறது?

* நீராவியா இருந்தா = அருவம்! கண்ணுக்குத்
தெரியாது!
*
பாத்திரத்துல புடிச்சி வச்சா = உருவம்!
கண்ணுக்குத் தெரியும்!
எந்தப் பாத்திரத்துல தண்ணியைப்
பிடிக்கறோமோ, அந்த உருவத்தையே
தண்ணியும் எடுத்துக்குதுல்ல? அதே
போலத் தான் இறைவனும்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால்
உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால்
அருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இதை அவ்வப்போது நாம் உணர்ந்து
கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும்
இல்லாத, அருவமும் இல்லாத….அருவுருவம்
என்னும் ஒரு குறியீடு!
வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு
அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம்
என்பது அருவுருவம்!

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து
பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்!
அதன் Geometry அப்படி!
எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல்
மனத்தை ஒருமைப் படுத்துகிறார்களோ, அதே
போல் வழிபாடு/ தியான முறைகளுக்குப்
பயன்படுத்துவதற்கு சிவலிங்க உருவம் நம்
பண்பாட்டில் அமையப் பெற்றது!
சிவபெருமான், யோகி மற்றும் குரு
வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும்
லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக
இருக்கு!

லிங்கம்=லிங்+கம்
*
லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு
லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)
*
கம்=கமயதே=எல்லாப் பொருளும்
அங்கிருந்தே எழுவது! (emerge)
இப்படி merge-emerge, ஒடுங்கிஎழுவது தான்
சிவலிங்க சொரூபம்!
சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க
புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ
புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும்
லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.

துர்வாச முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு
உருவம் இல்லாத லிங்க வழிபாடு,
ப்ரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத
அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க
உருவம் ஆனது
….
என்று பல புராணக் கதைகள்
வழங்கினாலும், அவையெல்லாம் வெறும்
கதைகளே!
ஆனால், லிங்கம் என்பது மிக உயர்ந்த
அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக்
கருத்து இல்லை!

பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம்
உத்தமம்
கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம்
வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று
எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச்
சொல்கிறது!

திருமூலர் லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல
அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்,
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!

இது வரைக்கும் சொன்னது புரிஞ்சுதோ
புரியலையோ,
சிவலிங்கம் அதைக் குறிக்கவில்லை என்பது
மட்டுமாவது புரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன்!
வாங்க சிவலிங்கத்தின் அமைப்பைக் கொஞ்சம்
பார்க்கலாம்!

சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை!
மும்மூர்த்திகளும் இருக்காங்க!
*
லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட
வடிவம்!
*
அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு
(cone)
வடிவம்!
அலங்காரம் செய்யப்பட்டிருந்தால்,
சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று
நம் கண்ணுக்குத் தெரியாது!

அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ
சக்தி பீடம்! இதுவே இரண்டு பாகமாக
இருக்கும்!
*
மேலே உருளையான (cylinder) பாகத்தைத்
தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது
சிவ சொரூபம்!
*
அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round)
பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்!
அது சக்தி சொரூபம்!

பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச
சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண
மந்திரம்!
திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது,
வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே
கொள்ளப்படும்!
ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும்
உண்டு!:)

இந்தப் பெயரே, இன்று பல விபரீத
பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக்
கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து
விட்டது!
யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!
ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம
காயனக
தேவகீ நந்தன ஸ்ரஷ்டான்னு விஷ்ணு
சகஸ்ரநாமத்துல கூட ஆத்ம யோனி“-ன்னு
வரும்!
ஆத்ம யோனின்னா ஆத்மா செல்லும் பாதை!

இதுக்கு விபரீதமா என்ன பொருளைச்
சொல்வீங்க? ஆத்மாவுக்கு ஏதுங்க யோனி“?
வடமொழியின் பல குறைபாடுகளுள் இதுவும்
ஒன்று!பல பொருட்களையும் ஒரே சொல்லில்
சொல்ல வந்தா இப்படித் தான் ஆகும்!

தமிழில் இது போன்ற பெரிய குறைபாடு
இல்லை! ஒருபொருட் பன்மொழின்னு
எல்லாம் நல்ல வேளை இருக்கு!
நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மணம்
என்று பொருள்! ஆனா இன்னிக்குப் பேச்சு
வழக்கில அதுக்குப் பொருளே வேற! அது
போலத் தான்!
நாற்றத் துழாய் முடின்னு பாட்டில் வருதே!
முகைமொக்குள் உள்ள நாற்றம் போல்னு
வள்ளுவர் கூடச் சொல்றாரு!
ச்சேதுர் நாற்றம் வீசும் மல்லி மொட்டு
போலத் தான் காதலும் அப்படின்னு
வள்ளுவர் சொல்லுறாருப்பா அப்பிடியா
பொருள் கொள்வோம்? ஹிஹி! அன்னிக்கி
என்ன பொருளில் வழங்கினாங்களோ, அப்பிடித்
தானே எடுத்துக் கொள்வோம்? அதைப்
போலவே தான் இதையும் எடுத்துக் கொள்ள
வேண்டும்!
ஆவுடையார்=சக்தி பீடம், லிங்கம்=சிவ பீடம்
னு பார்த்தோம்!

ஆக்கல்அளித்தல்அழித்தல் என்னும்
முத்தொழிலில்,
எல்லா உயிர்களும் ஆவுடையாரில்சக்தியில்
ஒடுங்கி (merge),
லிங்கத்தில்சிவத்தில் விரியும் (emerge)!
=
இது தாங்க எளிமையான சொற்களில்
சிவலிங்க தத்துவம்!

இதுக்குத் தான் இத்தனை சொற் குழப்பம்,
வார்த்தை விளையாட்டு!
சிவலிங்கம் அதைக்குறிக்கவில்லை
என்பதற்கு இன்னும் பல சான்றுகள் சொல்லி
விளக்கலாம்!
எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார்
(
யோனி) இருக்காது!
மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட
உண்டு!
நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும்
பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது
தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும்
தான் இருக்கும்!

நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை
சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி
அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில்
இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி
ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில்
லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து
பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை
போலவே இந்த திரவமானது உள்நாக்கின்
வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது
.
அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம்
.
இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .

எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாகபிரிக்கப்
படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன்
,
நடுபக்கம் விஷ்ணு ,அடிப்பக்கம் பிரம்மா
.
என்று சிவலிங்கத்தை கூறுவர் .அதை
போலவே நம்முடைய மூலாதாரம் பல
உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது
அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம்
என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம்
உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை
காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக
கருதுகிறோம் . உடலின் முக்கியமான இடமான
மூளை இருப்பதாலும் ,வாசியோகத்தின்
முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான
சிவபெருமனை தலை பாகத்திற்க்கு
வைத்துள்ளோம் . அதனால் தான் கபாலம்
வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று
புராணம் கூறுகிறது . நன்றாக பாருங்கள்
நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம்
போலவும் ,சிருநாக்கு லிங்கபாகம் போலவும்
இருப்பதை காணலாம் .இதை என்று நாம்
இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே
மாறிவிடுவோம் . மற்ற படி ஆண் உறுப்பும்
பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம்
என்றுகூறுவர் .அது தவறு.

ஆதியும்அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி
யாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் )
உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று
விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு
வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.
அவ் வடிவங்கள்,
அருவம் சிவம் அதிசூக்குமம் கண்ணுக்கு
புலனாகாது– >இது நிட்களத் திருமேனி
எனவும் சொல்லப்படும்.

உருவம் மகேசுவரன் தூலம் கண்ணுக்குப்
புலப்படும்இது சகளத் திருமேனி எனவும்
சொல்லப்படும்.
அருவுருவம் சதாசிவன் சூக்குமம்
வடிவம் இல்லைஇது சகள நிட்களத்
திருமேனி எனவும் சொல்லப்படும்.

இதில் அருவம் கண்ணுக்கு புலனாகாது,
உருவம் உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி,
நடராசர்– போன்றவை. இந்த உருவத்
திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 )
வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்
கள்மகேசுவர மூர்த்தங்கள்
என்றுசொல்லப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத்
திருமேனியே சிவலிங்கம் எனப்படும்.

இலிங்கம்” – என்பதற்கு குறி என்பது
பொருள்,” குறி ” – என்றால் = ஒரு அடையாளம்
ஆக காண முடியாத இறைவனை
காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம்
எனப்படும்.

சிவலிங்கம்= சிவ + லிம் + கம்
சிவம் – இறைவர்லிம் அண்ட சராசரங்கள்
அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் ஒடுங்கிய
அப்பொருள்கள் ( சராசரங்கள் ) மீண்டும்
தோன்றும் இடம்,
ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும்
அழித்தும்அருளவும்வல்ல வடிவமே
சிவலிங்கம் எனப்படும், சிவலிங்கத்தின்அ
டிப்பாகம் நாற்கோண வடிவினதாய் இருக்கும்
இது பிரம தத்துவம்
சிவலிங்கத்தின் நடுப்பாகம் எண்கோண
வடிவினதாய்இருக்கும் இது விஷ்னு
தத்துவம் ( இது ஆவுடை எனப்படும் )
சிவலிங்கத்தின் மேல் பாகம் நீண்ட வட்ட
வடிவினதாய்இருக்கும் இது சிவ தத்துவம்
(
இது பாணம் எனப்படும் )
இந்த பாணத்தின் அடிப் பாகத்தில்
உருத்திரனும், இந்த பாணத்தின் நடுப்
பாகத்தில் ஈசுவரனும்,
இந்த பாணத்தின் மேல் பாகத்தில்
சதாசிவனும்,இருக்கிறார்கள்.

இந்த சிவலிங்கம் என்பது இரண்டு
வகைப்படும், அவை,
1.
பரார்த்தலிங்கம்-( திருக்கோயில்களில்
அனைவரும் வழிபடத் தக்க வகையிலே
கருவறையில்எழுந்தருளியிருப்பது )
2.
ஆன்மார்த்தலிங்கம் அல்லது இஷ்ட லிங்கம்
(
விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை
பெற்றுஇல்லத்தில் வைத்து பூசிப்பது )
விஞ்ஞானிகள் அணுவை ( எலக்ட்ரான் )
ஆராய்ச்சி செய்தபோது,அந்த அணுவானது
பச்சை நிறமான ஒரு வட்ட
வடிவமாகவும்,அதன் மீது ஒரு சோதியுமாக
காட்சி தந்ததாககுறிப்பிட்டுள்ளார்கள்,
ந்தபச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன்
மீதிருந்த சோதி இலிங்கமாகவும்
காட்சியளித்ததுஎன்பது விஞ்ஞானிகளின்
ஆராய்ச்சி பூர்வமான உண்மை.இத்தகையை
அற்புதமான இலிங்கவடிவத்தை, தமது ஞானக்
கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார்
பெருமான்பெரிய புராணத்தில் ,
..
காணாத அருவினுக்கும் உருவினுக்கும்
காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம்
சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்முகனும் காண
நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய் தோன்றியது
தெளிந்தாராய்.
எம்பிரான் சாக்கிய நாயனார் புராணம் : 8
என்று குறிப்பிட்டு அருளியிருப்பதை சிந்தித்து
வியக்கலாம்.

ஆக நம்பொருட்டு இறைவன் எடுத்து
அருளார்ந்த நிலையிலே திருக்கோயில்களில்
வீற்றிருக்கும் இலிங்கத் திருமேனியை
தரிசிப்போம்.. உய்வு பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *