நாடி சுவடியில் சித்தர்கள் கூறும் ரகசியம்

நன்றி: மறைக்கப்பட்டத் தமிழர்களின் பெருமைகள்

நாடி சுவடியில் சித்தர்கள் கூறும் ரகசியம்

விஞ்ஞானம் OZONE என்ற அதிக திடர் அழுத்தம் கொண்ட பிராண வாயுவை தெளிவாக விவரிக்கின்றது. இதன் விஞ்ஞான தன்மையைச் சித்தர்கள் தம் பாடல்களில் சொல்லி நமக்கு வரவிருக்கும் கேடுகளை முன்னமேயே அறிவுறுத் துகின்றனர்.

‘‘கூறுகொண்ட பிராணாவி வணுக்கூட
மீறுதடிப்புடைத்து குடையப்ப
விரிந்து புவிவாழ் சீவரைக்காக்க
கண்டோமே: தடிப்பொப்ப துவிமடங்கு
யரத்தே குடையிருப்ப நிலலுலகு
என்போமே’’
என்றார் சிவவாக்கியர்.
திடர் பிராண வாயு என்பது OZONE ஆகும். இது ஏறக்குறைய இருபது கிலோ மீட்டர் பருமன் உடையது. குடையைப் போன்று பூமியைச் சுற்றி விரிந்திருக்கு. சுமார் நாற்பது கிலோமீட்டர், பூமியின் மட்டத்திலிருந்து உயர்ந்து நின்று படர்ந்தமை காண்க என்கிறது பாடல். விஞ்ஞானம் இதனை ஏற்கின்றது. இதனை ஆங்கிலத்தில் STRATOSPHERE என்கின்றனர். இதனை சித்தர் நிழல் உலகு என்கின்றார்.


‘‘ அணுவது திருதியென நிற்ப, ஆகாய வண்ணமே நிறமென கூறுதும்’’

அதாவது ஓசோனில் ஆக்சிஜன் மூன்று அணு உறைகிறது என்கின்றார் சித்தர். OZONE நீல நிற வாயு என்றும் விவரிக்கின்றார். இது விஞ் ஞானம் OZONE -ஐப் பற்றி கூறும் அறிவியலை உண்மையாக்குகிறது. ஒத்துப்போகின்றது.

‘‘நீல நுண் பழுதாங் கதிர்களை இறுத்தும்
வடிதாங்கி யென பணி செய் படைத்தான்
வாயுபகவானே. இலையேல் தோல் வெந்து
போம் – நீர் வாழ் சீவரேசியயேது தம்மோடு,
பயிரினங்களும் பழுதாப் போமே’’

என்றார் குரங்கணிச் சித்தர்.
விஞ்ஞானம் UVB என்ற ஒரு கதிர்வீச்சு, சூரிய ஒளியில் கலந்திருக்கு. இதனை ULTRA VIOLET கதிர் என்பர். இந்த கதிர் மனிதரின் தோல் மீது பட, தோல் புற்று நோயுக்கு ஆதாரமாகும். நீர் வாழ் முதலை, மீன், தாவர இனங்கள் அழிந்து படும் என்கிறார் சித்தர். விஞ்ஞானம் இதனை முற்றிலும் ஏற்றுக் கொள்கின்றது.

‘‘ஓங்கி நிற்க உறுதுணையாமது தாமே
தாங்கி நிற்க பெருமூறு என பகறு’’

என்றார் காகபுஜண்டர். OZONE வாயு நம்மை விட்டு எட்டி நிற்க பெரும் உபகாரமாக விளங்கும். இந்த வாயு, நம் அருகு நிற்க, நாம் சுவாசிப்போமேயாயின் ரத்தம் கெடும். இதயம், மூளை, நுரையீரல் கெட்டு மரணம் சம்பவிக்கும் என்கிறது விஞ்ஞானம். பெறுமூறு என்ற சொல். பெரிய தீங்கை விளைவிக்கும் என்று பொருள்பட பேசுகின்றார் சித்தர்.

‘‘வாமேசாதி யெனுமொறு ஆவியு மிதற்கு
காலனாமே – யொற்றையணு நூறாயிரமணு
வாம் பிராணனாவியை மடிக்குமென வரி’’

என்ற வாதநாத சித்தர் பாடல் போற்றத்தக்க தாகும். வாமேசாதி என்பது CHILORINE வாயுவை குறிப்பதாகும். சூரு குளோரின் அணு, ஒரு லட்சம் OZONE MOLECULE_ஐ அழிக்கும் என்கிறார் சித்தர். நவீன விஞ்ஞானம் இதனை ஏற்று CHLORO FLUOROCARBON அல்லது CFS என்ற சுருக்கமுடைய வாயுவை தடை செய்துள்ளமை நோக்கத்தக்கது.
SEMI CONDUCTOR என்ற விஞ்ஞானம் லிணிஞி அதாவது LIGHT EMITTING-DIODE என்ற உபயோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைக் கொண்டு , குறைந்த மின்சாரத்தினால் அதிக வெளிச்சம் பெறலாம். டெலிவிசனில் தெளிவாக _ நேரில் பார்ப்பதைப் போன்ற காட்சிகளை பார்க்கலாம் என்பதனை நவீன அறிவியல் விஞ்ஞானம் நமக்கு புலப்படுத்துகின்றது. இதனை பலநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த சித்தர் பெருமக்கள்,

‘‘ துணையதனில் மின்னோட்டமேற்றி பெரும்
ஒளி கற்றைதம் மால் கண் நோய் காணுமே-
திரைமயங்கியந்தகனென பேசுமே யன்றி
மாசுணும் சுற்றுச் சூழலென்றறியீரோ’’

என்கின்றார் அழுகணியார். DIODE வெளிச்சம், உற்பத்தி செய்யும் முறையை முன்னமேயே பேசி, அதனால் விளையும் தீங்காவது. RETINA என்ற கண்திரை அழியும். பற்பல கண் நோய்கள் ஏற்படும். சுற்றுச் சூழல் மாசுபடும் என்றார் சித்தர். தற்போது ஆராய்ச்சியாளர்கள் இதனை யரு பகுதி ஏற்றுக் கொள்கின்றனர்.

‘‘இயற்கை இஃது இயற்ற இவ்வூறு இலாது இருக்கஇய
ல்மாசு இலாதாக இனிமையிதோ’’

என்றார் குரங்காட்டியார். இதே LED வெளிச்சம், இயற்கையில் உண்டாக, கண்களுக்கு தீமை இல்லை. இயற்கையின் மாசு அழியும் என்கின்றார் சித்தர். பூமியில் மேற்பரப்பு வெப்பம் அடைவதை உணர்ந்த சித்தர் பெருமக்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு கேடு விளையும் என்று பேசுகின்றனர்.

‘‘புவிதஞ் சூடு வெம்மையால் தகிக்க
ஆழ்கடல் வாழ் சீவர்களெல்லாம்
அழிந்து போகக் கண்டோமே –
இவைதம் பாதுகாவல் சொற்பமென்போமே’’

என்றார் காக்கையார். கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வும், பாதுகாவலும் ஒரு கேள்விக்குறி என்கிறது நாடி.

‘‘ கரியவாயு அட்டபான் புள்ளி ஓடும்
அகிலத்து நூலாயுந் நாளது முப்பா
னாறு திங்கள் முன்னமே’’

என்ற பாடல், கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டும், நமது காற்று மண்டலத்தில் எண்பது புள்ளிகள் கரியமில வாயு கலக்கும் என்றார். விஞ்ஞானம், 1960 A.D-ல் CONCENTRATION 310 புள்ளிகளாக இருந்தது. 2010 A.D-ல் 390 புள்ளிகளாக இருக்கிறதைக் காட்டுகிறது.
உடல் எடையை, பருமனை குறைத்து அழகுடன் வாழ இந்நாளில் எல்லோரும்-முதியவர்கள் உட்பட பற்பலரும்-எண்ணமிட்டு, அசாதரணமான உடற்பயிற்சிக்கு, ஆகாரக் கட்டுப்பாடு, சிற்சில மருந்துகளை உட்கொள்கின்றனர். இதனை தடுக்கிறார் சித்தர். கொங்கணிச் சித்தர் தமது பாலில்

‘‘ நிறை குறைத்து பணி நீக்கி நீடுவாழ
வெண்ணியே யாடி யோடி திரேகமதனை
முறுக்கி நிற்பர் யரு சாரார்-
நடை நெடு பயணங்கண்டு பரவசங்
காண்பாரதனிலவுட தமதுபல வுண்டு மேனி
இளைப்போர் தம் வதனம் வாட, பிணி
யுட் புகுமே-தம் பணி தாமே காலத்
தாற்ற பிணி யேது வோது?

தமது உடலை வருத்தி இளைப்பதனால் பற்பல நோய்கள் வர ஏதுவாகும் உடலை வருத்தாது, அன்றாட நமது கடமைகளை சரியாகச் செய்ய நோயின்றி நீடு வாழலாகும். உடல் பருமனை குறைக்க மருதுண்போர் வாழ்வு சோகம் கொளும் என்றார் சித்தர்.
சுற்றுச்சூழல் மாசுபட்டு, அதனால் மனித குலத்திற்கு ஊறு விளையும் என்று சித்தர்கள் முன்னமேயே அறைகூவல் விடுத்தும் பலர் அதனைப் பொருட்படுத்தவில்லை. குதம்பையார் தமது பாடலில்,

‘‘ சீனத்தோர் சோகங் கூடும்-
வாயு மண்டலத்தில் நுந்துலோகமது
மிதக்க, ஒளி மங்க, புகைமூட்டங்
காண, மூச்சுக் கோளாறு காணுதே’’

என்றார். இதனை விஞ்ஞானிகளின் ஆய்வு நம்மை வியக்க வைக்கின்றது. சீனாவின் பீஜிங், டியான்ஜின், ஹீபீ போன்ற இடங்கள் ஒளி மங்கித் தெரிகின்றன. காற்று மண்டலத்தில் புகை (SMOKE) கலந்து, சூரிய ஒளியால் மாறுபாடு கண்டு (SMOKE) என்ற பனித்துகள் கலந்தாற்போல மங்கி நிற்கின்றது. உலோகத் துகள்கள் வாயு மண்டலத்தில் கலக்க, சுவாசப்பை கோளாறு, மூச்சுக் கோளாறினால் மக்கள் அவதிக்கு ஆளாகி அல்லல்படுவதாக கணக்கியல் காட்டுகின்றது. தண்ணீரும் வேகமாக மாசுபடுகின்றது.
சமூகத்தில் ஆரோக்ய கேடு ஏற்படுவது பெரும்பாலும் விஞ்ஞான வளர்ச்சியை தவறான முறையில் கையாளுவதாலேயே இதனை சித்தர்கள் தெளிவாக அறிந்து வாழும் வழியை நமக்கு போதிக்கின்றனர். ஜமதக்கினி முனிவர் தமது பாடலில்

‘‘ எளிமை கோலமொடு உண்டியும்
எளிமை என்றிருக்க தனந்தேடி நல்லறஞ்
செய்தே இன்புற்று ஈசனைத் தொழுதெழ
இம்மையிலேயே சுவர்க்க மென்றிருக்கலா மீண்டே’’

எளிமையான தோற்றம்-மிதமான சாப்பாடு- சம்பாதித்த பணத்தில் சிறு தருமம் செய்து இறைவனை தியானித்து அமைதியுடன் இருக்க, வாழ்வு சொர்க்கமாகும் என்றாரே.

 

4 Responses to நாடி சுவடியில் சித்தர்கள் கூறும் ரகசியம்

 1. K. Sivapalan says:

  அற்புதமான தகவல்கள். இதைத் தேடிக் கண்டுபிடித்து
  வலையேற்றியதற்கு நன்றி.
  சிவபாலன் -நியூயார்க்

 2. Gunasekaren. s says:

  GOOD DAY.
  THANKS FOR THE ABOVE LESSON (NOT INFORMATION).
  OLAI SUVADI THEVAI.
  AGAIN THANKS.
  GUNASEKAREN.S, VELLORE, 9344883290

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *