புத்தாண்டில் இதைக் கடைபிடித்தால் என்ன?

நன்றி: பாலசுப்ரமணியன் அண்ணாமலை

புத்தாண்டில் இதை கடைபிடியுங்களேன்….

1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு…..

2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்…..

3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி…..

4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்…..

5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து……

6. ரகசியங்களைக் காப்பாற்று…..

சிவலிங்கம் – சில விளக்கங்கள்

நன்றி: Astro Healer Daksna Murthy

சிவலிங்கத்தின் அர்த்தம்….!!! லிங்கம் என்றால் “SYMBOL”, (or) “குறியீடு
என்று பொருள்!

இறைவனைப் பரப்பிரம்மம் என்று
சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!

* ஹீரோ போல, முருகனும் கண்ணனும்
அழகாகச் சிரித்தால் = உருவம்!
*
உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ
ஒரு சக்தி நிலை = அருவம்!
*
உருவமும் உண்டு, அருவமும் உண்டு! ()
உருவமும் இல்லை, அருவமும் இல்லை =
அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? =
அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!
உருவமாகப் பார்த்தால் இறைவனும்
மனுசனைப் போலத் தான்! கை கால் காது
மூக்குன்னு எல்லாம் கடவுளுக்கும்
இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா?

மூக்குல மூச்சு விடுவாரான்னு
நெனச்சிக்குவோம்!
உருவம்னா வெறும் மனுச உருவம் மட்டும்
தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம்
கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம்
கடவுள் இருக்க மாட்டாரா?”-ன்னு சில பேரு
குறுக்குக் கேள்வி கேப்பாங்க!

திபெத்திய மந்திரம்

திபெத்திய  மந்திரம்
##################
ஓய்வாக இருங்கள்
அமைதியாக இருங்கள்
உங்கள் உயிர் மைய நிலைக்கு செல்லுங்கள்
எல்லாவற்றையும் சாட்சி போல் கவனியுங்கள்
நடப்பதில் எதிலும் நீங்கள் தலையிடாதீர்கள்
அவை அதன் போக்கில் நிகழட்டும்
நீங்கள் ஒரு சாட்சியாக நின்று பாருங்கள்
உங்களுடைய உண்மையான நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்குள்ளே இருப்பதை பாருங்கள்
ஆழமாக உணருங்கள்
பார்க்கப்படும் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்
பார்ப்பவனை பாருங்கள்
பார்ப்பதை மறந்து விடுங்கள்
விஷய ஞானம் விபரீதமானது அது ஒரு மனச்சுமை
விழிப்புணர்வோடு கணத்துக்குக் கணம் வாழுங்கள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் ஓய்வாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்

ஓஷோ