நூறு வயது வரை வாழ

நூறு வயது வரை வாழ…

ரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே… மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. முதலாவது கர்வம். மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

இரண்டாவது வாள்- அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

மூன்றாவது வாள்- தியாக உணர்வு இன்மை. அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.

நான்காவது வாள்- கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

ஐந்தாவது வாள்- சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக் கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.

ஆறாவது வாள்- துரோகம். இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.

_ இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’

_ சக்தி. அ. உமாராணி, கிருஷ்ணகிரி-1

பிரபஞ்சம் ஒரு முட்டை

நன்றி – Mogan Raj shared Hareesh Ravichandran‘s photo — with Adi Sivan.

13 hrs ·
Hareesh Ravichandran’s photo.
Hareesh Ravichandran‎POSTS பதிவுகள்

பிரபஞ்சம் ஒரு முட்டை …

ஒரு மனிதன் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் இறந்து விடுகிறான் .

அது ஒரு சாலை விபத்து . எந்த ஒரு வலியும் இல்லாமல் விபத்து நடந்த நொடியில் இறந்துவிட்டான் .

அவனது ஆன்மா ஒரு இனம் தெரியாத இடத்திற்கு செல்கிறது .. அங்கே ஒரு நபர் மட்டும் இருக்கிறார் .

அவரிடம் அவனது ஆன்மா .

“என்ன ஆயிற்று எனக்கு ? … நான் எங்கே உள்ளேன் ?”

“நீ இறந்துவிட்டாய் ” என்றார் அமைதியாக

“உண்மையாக நான் இறந்துவிட்டேனா ?”

“ஆமாம்.. அதை நினைத்து கவலை படாதே மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகின்றனர் ”

“இது தான் இறப்பிற்கு பின்னான இடமா ?” என்றான் சற்று பதட்ற்றதுடன் .

“ஆமாம்”

“நீங்கள் கடவுளா ?”

“ஆமாம் ” என்றார் சிறிது புன்முறுவலுடன் .

இந்த ஆவணங்கள் தொலைந்தால் என்ன செய்வது?

22 hrs ·

1. இன்ஷூரன்ஸ் பாலிசி….யாரை அணுகுவது..?
—————————————————————————

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள்.

அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.

இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்;

அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

 

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி) யாரை அணுகுவது..?
————————————————————————————-

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.