Tag Archives: அக-நாகர்கள்

அக-நாகர்கள்

தினமணி
04-06-2015
***********
அக-நாகர்கள்
**************
By அரவிந்தன் நீலகண்டன்
First Published : 31 May 2015 10:27 AM IST
உலகம் முழுவதும் பாம்புகள் என்றால் ஒரு அச்சம் இருந்திருக்கிறது. கூடவே ஒரு வித கவர்ச்சியும் இருந்து வந்துள்ளது. ஏன்? மிக இயல்பான பதில் அவற்றின் விஷம். அவற்றினால் ஏற்படும் மரண ஆபத்து.

ஆனால் உலக பண்பாடுகள் அனைத்திலும் பாம்புகள் மிக உச்சமான ஆனால் மிக ரகசியமான ஒரு விஷயத்தின் குறியீடாக மதிக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு மிக எளிதாக நினைவுக்கு வருவது குண்டலினிதான். மானுடத்தின் இறை வேட்கை இறை அனுபவம் இவற்றுடன் தொடர்புடைய ஒரு ‘ஆற்றலாக’ குண்டலினி எனும் கோட்பாடு இந்திய மரபில் உள்ளது. அதன் குறியீடாக பாம்புகள் உள்ளன. ஒன்றோடொன்று பிணைந்த பாம்புகள். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற பண்பாடுகளிலும் இத்தகைய பாம்புக்குறியீடுகள் உள்ளன. கிரேக்க பண்பாட்டில் ஹெர்மஸ் (Hermes) தெய்வத்தின் கையில் இருக்கும் கோலில் பின்னி பிணைந்த பாம்புகளை காணலாம். இன்றும் மருத்துவ சின்னங்களில் இவற்றை காணலாம். உலகமெங்கும் இன்று மிகவும் பொதுவாக நிலவி வரும் பாம்பு குறித்த தொன்மம் பைபிளில் உள்ளதுதான்.