Tag Archives: இகழ்ச்சி

பழமொழி நானூறு – 6.46

6.46 ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும்

தோற்றத்தா மெள்ளி நலியற்க – ”போற்றான்

கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்

உடையானைக் கவ்வி விடும்.”

காப்பாற்றதவனாகி வாயிலை அடைத்து வைத்து அடித்தால், தன் நாயும் உரியவனைக் கடித்துக் குதறும். ஆகவே, தம் சுற்றத்தார்களையும் நம்மை எதிர்க்க வலிமையற்றவர் என் நினைத்து, பிறருக்கு முன்னே ஒருவரையும் இகழ்ந்து பேசித் துன்புறுத்தல் ஆகாது.

பழமொழி:
***************
போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால்

நாயும் உடையானைக் கவ்வி விடும்.”