Tag Archives: இன்னார்க்கு இன்னதென வகுத்தல்

பிரபுலிங்க லீலை-2.2

பிரபுலிங்க லீலை
*******************
2.2 இயங்குவ நிற்ப வான யாவையுங் கலைமா தோடு
முயங்குபு முன்ன மீன்ற முளரிவா னவன்வ குத்து
வியன்புவி யண்டந் தன்னுள் விதித்தனன் தகுமி டங்கள்
வயங்கெழும் அசுரர் நாகர் வானவர் முதலி யோர்க்கும்

இயங்குவ – போக்குவரத்துடையன,
நிற்ப – நிலைத்து நிற்பன,
முயங்குபு – சேர்ந்து,
முளரிவானவன் – நான்முகன்,
வியன் – பரந்த,
விதித்தனன் – ஏற்படுத்தினான்,
வயங்கெழு – வெற்றி பொருந்திய,
வானவர் – தேவர்.

கலைவாணியோடு சேர்ந்து நான்முகன் இயங்குவன, நிற்பன (சரம், அசரம் = சராசரம்) ஆகியவற்றை இன்னார்க்கு இன்னதென வகுத்து, அசுரர், நாகர், தேவர் முதலியோர்க்கு வழங்கினான்.