Tag Archives: இரேசகம்

ஒளவைக் குறள் – (251-260)

3. தன்பால்

************
26. சிவயோக நிலை (251-260)
***********************************
251. அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல்.

உந்திக் கமலத்தின் அடிப்பாகத்திலிருந்து உண்டாகும் வாயுவாகிய அபானனைத் திருவடிகளோடு செலுத்திப் பிறகு பிரணவ உச்சிக்குள் செலுத்திவிடு.

வாசிட்டம் : புசுண்டர் கதை :

“ஆடுகின்ற பிராண லயத்தருகு மேவியபான லயத்தரு  –
குற்றுப்பிராணாபான
ணூடுபயில் சிற்பரத்தை யேத்துகின்றே நுற்றவபானன்  –
றேற்றமொழிந்துநிற்க
நீடுபிராணனு மிறக்க மூக்கினுச்சிநேர் விசும்பிற் –
சிற்பரத்தை நீக்கமில்லேன்
நாடுமலமொன்று மறக்கலைகள்சூழ நாகர்தொழும்    –
பதம் பெற்றே னல்லநோக்கால்.”

252. உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு.

சந்திர சம்பந்தமான அபானனை இன்னதென அறிந்து கொண்டு, உந்திக்கமலத்தில் கலக்க வைத்து, சிதாகாயத்தில் செல்லும்படி விடு. இக்குறளில், இரேசக தந்திரத்தைச் சொல்லிப் பின் பூரக ஆரம்பத்தையும் சொல்லுகிறார்.

வாசிட்டம்:

“குண்டலியெனுஞ் சீவசத்திமிக நல்லதாய் கூடிநிற்கு
மண்டுபிராணாபான வடிவமாதலிற் கீழ்மேல் வந்துபோகு
மிண்டற மேல்போகிலு மெல்லா மாய்ப்போ மீளினு மெல்லாமாய் மீளுந்
தண்டலிலாப்பு மானாகிச் சாமேவும் பிராணனுமிச் சத்திதானே.”

253. மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து.

மிருதுவாக அபானனைப் பிராணனோடு கலக்கவைத்து, உடல் விதிர்விதிர்த்து, கலைகள் பெருத்து மேல் நோக்கும்படி செய்து, கும்பக நிலையடையும் சமயத்தை அறி.

மணிவாசகப் பெம்மான்:

“மெய்தானரும்பி விதிர்விதிர்த்துன் விரையார் கழற்கென் கைதான் தலைவைத்துக்கண்ணீர்ததும்பிவெதும்பியுள்ளம் பொய்தான் றவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி யென்னுங் கைதானெகிழ விடேனுடையா என்னைக்  கண்டுகொள்ளே.”

வாசிட்டம் :
இரேசகம் :

“மருவிதய விண்ணினுந் தன்னித யத்தூடே
வருத்தமறப் பிராணனன்கள் புறநோக் கெய்தல்
புரிவுறவுண் மேவுமிரே சகந்தா னாகும்.”

பூரகம்:

“விராவிந்த பிராணன் விடாதசைவாஞ்சத்தி
மேவியொழி யாதுலவு மேனியுள்ளே
திரமின்றிப் பிறத்தினும் முள்ளினுமெப்போதுந்
திரும்பாது மேற்போதல் செய்கையாம்.”

“மற்றையபானனு மசைவாஞ் சத்திமேவி
மாறாமலுலவு மகவாகியத்தி
லுற்றவுடலிற் கீழேயோடாநிற்கும் முறுநனவு
கனவிலு மிவ்வுயர் பிராணன்
முற்றுற மீள்வது நன்றாமறிந்தோர்க் கின்பமுழுதளிக்கு
மிதனியல்பை மொழியக் கேளாய
பெற்றபுறத் தீராறு விரன்மட்டோடும் பிராணன்
மீட்டுடலூறல் பூரகமாய்ப் பேசும்.”

கும்பகம்:

“புறநின்று சாலவு முள்ளடங்கவன்பு பொருந்தாம லபானனுடற் புகுதலெய்துந்
திறனென்று மதனையும் பூரகமாய்ச் செப்புந் தீரவபானனு மொளித்துப் பிராணந்தானு
மறவுமிதயத் தசைவற்றிருக்கு மெம்மட்டம் மட்டுங் கும்பக மரமவத்தையாகும்
இறவறுநல் யோகியரீ தனுபவிப்ப ரெக்கலையுங் கற்றுணர்ந்த வேதத்தோனே.”

254. இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும்.

இரேசகத்திற்கு வேண்டிய கால அளவு முப்பத்தியிரண்டு  மாத்திரை. பூரகத்திற்கு  வேண்டிய கால அளவு பதினாறு மாத்திரை.

“கண்ணிமைப் பொழுதும், கைநொடிப்பொழுதும்  மாத்திரைக்களவாம்.” – பவணந்தி

திருமந்திரம்:

“மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாமி ரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
யாலால முண்டா னருள்பெற லாமே.”

மேல் = தலை, கண், காது முதலியன.
கீழ் = கால், பெருவிரல் முதலியன.
நடு = நெஞ்சம், கொப்பூழ் முதலியன.

மேலும், நடுவும் நிறையுமாறு உயிர்ப்பை உள்ளிழுக்க வேண்டும். இதுவே பூரித்தல். அவ்வாறு எடுத்ததைத் தக்க அளவுக்கு வெளிவிடுதல் வேண்டும் இதுவே இரேசகம். பூரித்தலுக்கும் இரேசகத்துக்கும் நடுவே எடுத்ததைத் தடுத்து நிறுத்துவதே கும்பகம். இங்ஙனம் செய்வதுவே வளிப்பயிற்சி. இதை இடையறாது செய்து வந்தால் ஆலகால விடத்தை (மாலால் விழையும் மேலாம் பிழை) உண்டவன் அருள் கிட்டும்.

“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”

வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

இடகலை,பிங்கலை ஆகிய இரு கலைகளினாலும் பூரக, கும்ப, இரேசகத்தை மாற்றி மாற்றிச் செய்தால் மூலக் குகையைத் திறந்து உட்செல்லலாம்.
இட பிங்கலைகள் என்பது சூரியன், சந்திரன் என்னும் இரு திருவடிகளை அடக்கி வைத்திருக்கும் இட, வலக் கண்களே. இங்கு இரேசித்தல் என்பது ஒன்றுசேர்தலாம். சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தால் காருவா என்னும் அமாவாசையாகும். அச்சமயமே ஞான வினைகளைத் தொடங்கும் காலம்.

வாசிட்டம் – புசுண்டர் கதை :

“நீ யிங்கெதிர்காணும் பூதவுடலாம் மனைநடுவே பொருந்துமிதய புண்டரிகச் சீதமலரில் உள்ளிரண்டு செறியும்பிராண நபானனென்.”

திருமந்திரம் :

“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக
கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே.”

தலைக்காவல் = சிறந்தகாவல், தலைக்குக் காவல். களிம்பு = ஆணவமலம்.

ஆருயிர்களை ஆட்கொள்ள வேண்டிய அருள்வினைக்கு ஈடாக விண்ணாகிய சிவ உலகத்திலிருந்து நில உலகத்திற்கு இறங்கிச் சிவகுருவாக வந்தருளினான். மிகவும் குளிர்ச்சி பொருந்திய தாளை(திருவடி)த் தலையில் முன்புறம் அமைத்து அருளினான். அவனே உள்நின்று நெகிழச் செய்து ஒப்பிலாப் பேரின்பக் கண்ணாகிய அகக்கண் காட்டி, அன்பு முதிர்ச்சியால் அருளை வளரச் செய்து களிம்பாம் ஆணவமலத்தை அறுத்தான்.

அமாவாசை காலத்தில், நாம் வெளிப்படையாகச் செய்யும் வினைகள் எல்லாவற்றையும் உள்முகத்தில் அமைத்துப் பார்க்க மெய் விளங்கும்.

ஒளவைக் குறள் – (41-50)

1. வீட்டுனெறிப்பால்
*******************
5. வாயுதாரணை (41-50)
****************************
41.மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங்  காண்.

காற்றானது   குண்டலியின்  மத்திய  பாகத்திலுள்ள  வாயு உதிக்குமிடத்தில் உதித்து, குண்டலியின் உச்சியில் இரண்டாகப் பிரிந்து, நான்கு திக்கிலும் பரவி, பேரண்ட வெளியாகிய துவாதசாந்த வெளியில் செல்லும்போது பன்னிரண்டு கலைகளாக வெளிப்பட்டு நிற்கும்.

“மூலம்” – என்பது மூலாதாரமல்ல. மூலாதாரம் என்னும் பழக்கச் சொல் ஒவ்வொரு பொருளும் உதிக்குமிடம். துவாத சாந்த வெளி யென்பது பிரணவ உச்சியைத் தாண்டிக் கலைகளோடு செல்லும்போது தலைக்கு மேல் பன்னிரு அங்குல அளவில் உள்ளது. இந்த இடமே இரவு பகலற்ற இடம்.

42.இடைபிங் கலைகளி ரேசக மாற்றி
லடையு மரனா ரருள்.

அரன் என்பதைப் பரமசிவனாகக் கொள்ளாமல் பரம+சீவனாகக் (பர+சீவனாக) கொள்ளல் வேண்டும். ஆகவே, ஆதியெனக் கொள்வோம்.
இவ்விடத்து, பீர் முகம்மது அவுலியாவின் ஆநந்தக் களிப்பின் ஒரு பாடலை நினைவு கூருதல் அவசியம்.

“இவ்வென் றெழுத்ததைப் பற்றி – இரு
வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக்
கொல்லன் றுத்திகொண் டூதி – நல்ல
கோவலமாய் மூலக் குகையை யெழுப்பி
வில்லின்மேல் நாணம்பை யேற்றி – வெகு
வேகமா யொன்பது வாச லடைத்து
அல்ஹம்தி லொன்றாகி நின்ற – நந்தம்
ஆதியை நன்றாகக் கண்டுகொண்டேனே.”

வளிநிலையாம் மூச்சுப் பயிற்சி குறித்துத் திருமூலர் :

“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”

வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

இடகலை,பிங்கலை ஆகிய இரு கலைகளினாலும் பூரக, கும்ப, இரேசகத்தை மாற்றி மாற்றிச் செய்தால் மூலக் குகையைத் திறந்து உட்செல்லலாம்.
இட பிங்கலைகள்  என்பது சூரியன், சந்திரன்  என்னும் இரு திருவடிகளை அடக்கி வைத்திருக்கும் இட, வலக் கண்களே. இங்கு   இரேசித்தல்   என்பது ஒன்றுசேர்தலாம்.  சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தால் காருவா என்னும் அமாவாசையாகும். அச்சமயமே ஞான வினைகளைத் தொடங்கும் காலம்.

வாசிட்டம் – புசுண்டர் கதை :

“நீ யிங்கெதிர்காணும்  பூதவுடலாம் மனைநடுவே பொருந்துமிதய புண்டரிகச்  சீதமலரில் உள்ளிரண்டு செறியும்பிராண நபானனென்.”

திருமந்திரம் :

“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணென்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுறுக்கயொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக்களிம் பறுத்தானே.”

தலைக்காவல் = சிறந்தகாவல், தலைக்குக் காவல். களிம்பு = ஆணவமலம்.

ஆருயிர்களை ஆட்கொள்ள வேண்டிய அருள்வினைக்கு ஈடாக விண்ணாகிய சிவ உலகத்திலிருந்து நில உலகத்திற்கு இறங்கிச் சிவகுருவாக வந்தருளினான். மிகவும் குளிர்ச்சி பொருந்திய தாளை(திருவடி)த் தலையில் முன்புறம் அமைத்து அருளினான். அவனே உள்நின்று நெகிழச் செய்து ஒப்பிலாப் பேரின்பக் கண்ணாகிய அகக்கண் காட்டி, அன்பு முதிர்ச்சியால் அருளை வளரச் செய்து  களிம்பாம் ஆணவமலத்தை அறுத்தான்.

அமாவாசை  காலத்தில்,  நாம்  வெளிப்படையாகச்  செய்யும் வினைகள் எல்லாவற்றையும் உள்முகத்தில் அமைத்துப் பார்க்க மெய் விளங்கும்.

43.அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற்
பொங்குமாம்  பூரகத்தி னுள்.

விரல்களால் நாசித் துவாரங்களை மூடியும் திறந்தும் இரு கலைகளையும் கலக்கச் செய்தல் வேண்டுமெனக் கூறுவோர் பலர். ஆயினும், குருபிரான் காட்டிய வழியில் முறையாக அங்குலியெனும் புருவமத்தியில் பார்வை வைத்து இரு கலைகளையும் கலக்கச் செய்து  பூரகம்  செய்யும்போது  கலைகள் பொங்கி வழியும்.

44.எண்ணிலியூழி  யுடம்பா யிரேசிக்கி
லுண்ணிலமை பெற்ற  துணர்வு.

இங்கு “ஊழி” என்பதைக் காலத்திற்கு பயன்படுத்தாது, செயற்கை யொழிந்த காலத்திற்கு உபயோகித்தலே நன்று. கணக்கிலடங்கா(எண்ணிலடங்கா)த முறைகள் இரேசித்தால் உள்ளுடலுக்குள் அறிவு நிலைத்து, உணர்வு விளங்கும்.

45.மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு
வுயிர்ப்பின்றி யுள்ளே  பதி.

மயிர்க்கால் = மயில் + கால்.

மயில்  மாயயைக் குறிக்கும். மாயையின் வழியில் (கால்) உயிர்க் காற்றாகிய  வாயு (உயிர்ப்பு) அழிந்து கொண்டு இருக்கின்றது. அதை முற்றிலும் முக்கலையும் ஒன்றுமிடத்தில் பதித்து நிலை நிறுத்திவிடு.