Tag Archives: இறக்கவில்லை! இன்னும் இறக்கவில்லை!!

இறக்கவில்லை! இன்னும் இறக்கவில்லை!!

ஞானவெட்டியான் இன்னும் இறக்கவில்லை. அவன் தலையில் உள்ளதை வரும் தலைமுறைக்காக வலைத்தளத்தில் இறக்கி முடிக்குமட்டும் இறக்கமாட்டான். அதற்குள் அவசரப்பட்டு எம் புகைப்படத்தைப் போட்டு “மாட்டு மூத்திரம்” போன்ற பதிவுகளை ஒர் நண்பர் தமிழ்மணத்தில் இட்டது எமக்கு தற்போதுதான் தெரிந்தது. ஒரு வேளை எமக்கு விளம்பரம் தேடித்தருவதற்காகக் கூட அந்நண்பர் இட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் எம் தகுதிக்கேற்றவாறு பதிவு இட்டிருந்தால் மகிழ்வேன். இதில் என்ன ஆநந்தமோ? இனி நான் வேறு அவதாரம் எடுக்கவேண்டுமோ என்னவோ? தெரியவில்லை.