Tag Archives: இறை இல்லம்

8.இந்துமத வேதங்களில் இறைஇல்லம்!

இந்துமத வேதங்களில் காணப்படும் இறைஇல்லம்!
***********************************************************
அன்புச் சகோதரர் சுவனப் பிரியனின் இடுகையைப் படித்ததும் எனக்குத் தோன்றியவை:
***********************************************************************************************
இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் !

//நம்மை படைத்த இறைவனை எந்த சக்தியாலும் பூமியில் பார்க்க முடியாது.//

ஆம். உணரத்தான் முடியும்.

//அதற்கான சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று முன்பு பார்த்தோம்.//

கண்வழி சென்று கருத்தினில் கலந்தால் இறைவனை உணரமுடியும்.

“அத்தாற் பிறவி யவரிரு கண்களை
வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை
நித்தார மங்கே நினைக்கவல் லார்க்கு
எத்தாலுஞ் சாவிலை இறையவ னாமே.”
(திருமூலரின் ஞானக்குறி – 30)

//யாரும் காணாதபடிக்கு இப்பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனே வணக்கத்திற்கு தகுதியானவன்.//

பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.

//மனிதர்களை விட உயர்ந்த தன்மை கொண்டவனைத்தான் நாமும் இறைவன் என்று வணங்க முடியும்.//

ஆம். அந்நிலைக்கு உயர நாம் முயலவேண்டும்.

//இலயாஸ்பாத்

இலயாஸ்பாத் ‘பிரதி விகா பவித்திரஸ்தான்’ என்று பண்டித ஸ்ரீராம் சர்மா ஆச்சாரியர் இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். ‘பூலோகத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்’ என்பது இதன் பொருளாகும்.//

புண்ணியத் தலம் நம் உடலின் தலையே ஆகும்.

//நபா ப்ரதிவியா

‘நபா’ என்பதன் பொருள் ‘மையம்’. ‘பிரதிவி’என்பதன் பொருள் ‘பூமி’. ‘நபா ப்ரதிவி’ என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது.//

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஆக, பூமியின் மையம் நம் தலையின் மையப்பகுதியே.

//ஜ+அம்பு+துவிப் = வாழ்வு + நீர் + தீவு = நீர் எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் வாழ்க்கை துவங்குகிறது.//

ஆம் நீரும் நெருப்பும் இல்லையெனில் உயிர்கள் வாழமுடியாது. நீரும் நெருப்பும் சேர்ந்துள்ள இடமே கண்கள்தான்.

//இந்து மத நண்பர்கள் ஆதி இறை இல்லத்தை முற்றிலும் மறந்தாலும் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம்கள் கஃபாவுக்கு செய்யும் வணக்கத்தைப் போன்று சில கிரியைகளை இன்றும் செய்து வருகிறார்கள். முஸ்லிமகள் அந்த கஃபாவை நோக்கி தொழுதும் ஏழு முறை சுற்றி வலம் வந்தும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் கேட்கிறார்கள். இதைத் தொலைக் காட்சியிலும் பல முறை பார்த்திருப்போம். இதே போல் இந்துக்களும் காஃபா வடிவில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் கட்டி அதில் துளசிச் செடி வைத்தும், ஊருக்கு ஒன்றிரண்டு கற்பக் கிரகம் (கோவிலினுள்) கஃபா வடிவில் சதுரமாக கட்டி அதனுள் விக்ரகங்களை வைத்தும் வணங்குகிறார்கள். அதனை வலமும் வருகிறார்கள். மேலும் திருமண விஷேஷ நாட்களில் அக்னி குண்டமும் (கஃபா வடிவில்) கட்டி அதில் அக்னி வளர்த்தும் அவைகளை வணங்கியும் வலம் வரவும் செய்கிறார்கள். //

பக்தி வழி செல்வோருக்கு அவைகள் ஏற்றவையே.

//’எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.’//

அறிவு, உணர்வு, நினைவு, கருத்து ஆகியவைகள் எல்லாமே இறைநிலைகள். அறிவு எடுக்கப்பட்டுவிட்டால் அறியாமைதான் மிஞ்சும். அறியாமையால் செய்யும் காரியங்களை ஒதுக்கி, அவர்களை நல்வழிபடுத்த முயலல்வேண்டும்.

//- பகவத் கீதை – அதிதியாயம் 7 – வசனம் 20

‘நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது’//

ஆம் உணரத்தான் இயலும்.

//-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 – 19
-யஜூர் வேதம் 32 – 3

‘இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்’//

இயற்கையே கன்சூல் மஹபியா என்னும் இருள்தான். இருளில் நுழைந்தால்தான் இயற்கையாகிய இறையை உணர இயலும்.

//-யஜீர் வேதம் 40 : 9

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.//

பக்திவழி செல்வோருக்கு இவ்வாறு அறிவுறுத்தினால் துடுப்பு இல்லா படகைப்போல் அவர்கள் தத்தளிப்பார்கள்.

//இறைவனேமிக அறிந்தவன்//

ஐயமேதுமில்லை.