Tag Archives: உருத்திரன்

பிரபுலிங்க லீலை-1.19

உருத்திரன், திருமால், ஆகியவர்களின் தோற்றம்
*******************************************************

1.19 சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியன் விருவ ரானும்
தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி
மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும்
போற்றுறும் அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால்.சாற்றும் – சொல்லும்,
போற்றுறும் – போற்றுதலைப் பெறுகின்ற,
அரி – திருமால்,
பொறி – திருமகள்.

சிவனுக்கு இச்சாசத்தி சத்தியாவாள், இவ்விருவராலும் உருத்திரன் தோன்றுவன். உருத்திரனுக்குக் கிரியாசத்தி சத்தியாவாள். இவர்களிருவராலும் திருமால் தோன்றுவன்.
திருமாலுக்குத் திருமகள் சத்தியாவாள்.