Tag Archives: உருத்திர கூட்டம்

பிரபுலிங்க லீலை – 2.33

உருத்திரர்களின் கூட்டம் வருதல்
*****************************
2.33 தெள்ளு வார்திரைக் கங்கையுங் கங்கையுஞ் சிறிய
பிள்ளை யாகிய மதியமும் மதியமும் பெரிது
துள்ளும் ஓரிள நெளவியும் நெளவியுந் தொடர்பு
கொள்ளு மாறவன் நெருங்கின உருத்திர குழாங்கள்.

தெள்ளு – தெளிவு.
வார் – நீர்
திரை – புனல், ஆறு
மதியம் – பிறை
நெளவி – மான்
குழாம் – கூட்டம்.

இறைவன் கங்கை பிறை மான் முதலியவைகளை அணிந்துள்ளான். அவைகளை அணிந்துள்ள இறைவன் கூறாகிய உருத்திரர்களும், கங்கை கங்கையும், பிறை பிறையையும், மான் மானையும் நெருங்கும் வண்ணம் நெருங்கி அங்கே ஒன்றுகூடினர்.