Tag Archives: ஓங்காரம்
48.ஓங்காரம் – ஓம்
ஓங்காரம் – ஓம்
***************************
ஓம் எனும் மந்திரம் இறைவனுடன் உயிரினங்களை ஒன்றச் செய்யும் குணமுள்ளதால்தான் பிரணவம் என அழைக்கப்படுகிறது.ஓம் என்பது ஒரே எழுத்து (ஏகாட்சரம்). அதில் அ, உ, ம எனும் மூன்று ஒலிகளும் இணைந்துள்ளன. இந்த அகார, உகார, மகாரங்களை மாத்திரைகள் என அழைப்பதும் உண்டு.
அ – சூரியன்
உ – சந்திரன்
ம – அக்கினி
“ஓம்” எனும் பிரணவத்தில் மேற்கண்ட ஒலிகளோடு இம்மூன்று ஒளிகளும் இணைந்திருக்கின்றன.
இந்த பிரணவமாம் சுய வடிவில் இருந்துதான் எல்லா ஒலி, ஒளிகளும் உண்டாயின.
அ – சூரியன் – பருவுடல் (ஸ்தூலம்) – பெண் – இருக்கு வேதம் – கார்ஹபத்யாக்கினி – ஹரஸ்வம் – பாதம் – புத்தி – ரஜோ குணம் – சிவப்பு நிறம் – பூரகம் – நாதம் – கிரியா சக்தி – பிராஹ்மணி – பிரம்மா – சென்றகாலம் – ஜீவாத்மா – விராடபுருடன்
உ – சந்திரன் – நுண்ணுடல்(சூட்சுமம்) – ஆண் – யஜுர் வேதம் – தக்ஷிணாக்கினி – தீர்க்கம் – நாபி – மனம் – சத்வ குணம் – கபில நிறம் – கும்பகம் – பிந்து – இச்சா சக்தி – வைஷ்ணவி – விட்டுணு – நிகழ் காலம் – அந்தராத்மா – ஹிரண்யகர்ப்பன்
ம – அக்கினி – காரண உடல் (இலிங்க உடல்)- அலி – சாம வேதம் – ஆகவனீயாக்கினி – ப்லுதம் – சிரம் – அகங்காரம் – தமோ குணம் – கருப்பு – இரேசகம் – கலை – ஞான சக்தி – ரெளவுத்திரீ – உருத்திரன் – வருங்காலம் – கூடஸ்தன் – ஈசுவரன்
மேற்கூறியவை அந்தந்த மாத்திரைகளில் அடங்குவதால் அவையெல்லாம் பிரணவத்துள் அடக்கம்.
“ஓம்” படத்தை உற்றுப் பாருங்கள். அத்துடன் இணைத்துள்ள படத்தையும் கவனியுங்கள். வினாயகனின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ“வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் வினாயகன் என்பது இதற்காகத்தான். வினாயகனின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
திருமந்திரம்
*******************
“ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே.”
ஓங்காரம் ஒலியினின்று தோன்றுவது. அதுவும் மனிதனின் தலைக்குள் தோன்றுவது. அது வெளியே அடுத்தவருக்குக் கேட்காது. வெறும் வாயால் “ஓம்” என ஒலித்தல் பயனற்றது. அதை உள்ளேற்றி அதன் அதிர்வலைகளை உணரும் நிலைதான் உன்னதமானது. அது சங்குநாதத்தை ஒத்து இருக்கும். ஓங்காரத்திலிருந்துதான் ஐம்பூதங்களும் அதன் காவலர்களான அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அகியோரும் உண்டாயினர். இதிலிருந்துதான் இயங்குதிணை(அசரம்), நிலைத்திணை (சரம்) ஆகியவை உண்டாயின. சரமும் அசரமும் சேர்ந்து சராசரம் ஆயிற்று. சராசரமே உலகம். இவ்வுலகில் ஒருமலம், இருமலம், மும்மலம் ஆகிய மலங்களையுடைய மூவகை சீவராசிகள் தோன்றின.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
நுகர்வு – துய்ப்பு; அழுந்தியறிதல் – அனுபவம்
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். என்வே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
23.ஓங்காரம்
ஓங்காரம் – ஓம்
***************

***********