Tag Archives: கணங்கள்

பிரபுலிங்க லீலை – 2.39

பூதக்கூட்டம் வருதல்

2.39 குழவி பால்குடிப் பதுகடல் குடிப்பது குழவி
பழகு மாறுணல் மண்ணெடுத் துண்பது படைப்பு
முழுது மோர்தளர் நடைமகச் செயலெனு முரண்கொள்
வழுவி லாவருட் கணங்களெண் ணிகந்தன வந்த.

குழவி – குழந்தை.
பழகும் ஆறு உணல் – பழகும்படி உண்ணுதல்.
முரண் – வலிமை.
வழுவு – தவறு.
எண் இகந்தன – அளவு இல்லாதன.

பூதக்குழவிகளுக்குக் கடல் குடிப்பது பால் குடிப்பதுபோன்றது; மண் எடுத்து உண்பது பழக்கம். படைப்பு முழுதும் குட்டிப் பூதங்களின் விளையாடல். குட்டிப் பூதங்களின் பெருமையைக் கூறி பெரும்பூதங்களின் தன்மையை விளக்குகிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட அருள் கணங்கள்(பூதங்கள்) அளவற்றன வந்தன.