Tag Archives: கல் கிள்ளுதல்

பழமொழி நானூறு – 6.49

6.49 மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை

ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்

நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்

கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்.”

விளங்கின்ற மலை மீது உள்ள கிள்ள முயன்று வரும் கை வலியிலிருந்து தப்பினவர் இல்லை. ஆகவே, செல்வம் மிகுந்து அறிவில் சிறந்து மிகவும் மதிக்கப்பட்டவர்களை, அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என நினைத்தல் மிகவும் எளிமையேயாயினும், அப்படிச் செய்தால் துன்பம் மிக உண்டாகும்.

பழமொழி:

*************

கல் கிள்ளிக் கையுய்ந்தார் இல்.”