Tag Archives: கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்

பழமொழி நானூறு – 10.74

10.74 கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன றறிவாரின் மாணமிக நல்லரால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா ”கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல்.”

கற்றது ஒன்றில்லையாயினும், நற்குடியில் பிறந்தவர் கல்வி ஒன்றைமட்டும் அறிந்தாரைவிட, நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தவர்களே ஆவார்கள். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் போகவேண்டியதில்லை. கருமார் வசிக்கும் தெருவில் தையல் ஊசியை விற்கப் புகுவார் இல்லையாதலால்.

பழமொழி:
***************
கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்.”