Tag Archives: கோவைவாசி ஆகிவிட்டேன்

கோவைவாசி ஆகிவிட்டேன்

அன்புடையீர்,

வணக்கம். கடந்த 8 மாத காலமாக “சித்தன்” தளத்தில் இடுகைகள் இடமுடியாத சூழ்நிலை. புலம்பெயன்றாக வேண்டும் என்னும் இக்கட்டு. எங்கு செல்வது என்னும் முடிவெடுக்கவே 4 மாதங்களாகிவிட்டன. இறுதியில் கோவையில் குடியேறலாம் என்னும் முடிவெடுத்தாகி விட்டது. திண்டுக்கல்லில் உள்ள தொட்டு தொடங்கல் எல்லாவற்றையும் முடித்து, வரவு செலவு ஆகியவற்றை ஏறக்கட்டி, மூட்டை முடிச்சுக்களைக் கட்டி எடுத்துக்கொண்டு கோவை வந்து சேர்ந்துவிட்டேன். இன்னும் சில நாட்களில் “சித்தன்” தளம் புத்துயிர் பெறும்.