Tag Archives: சரி

3.இறைவனின் உருவம் என்ன?

இறைவனின் உருவம் என்ன?

********************************

உடலுக்குள் இருக்கும் பிரணவம் எனும் போது அது சத்தத்து ஒலியாகின்றது.
ஆனால் உள்ளத்து ஈசன் ஒளி எனும் போது அந்தப்பிரணவமே கண்புலன் சார்ந்த
ஒளியாகின்றது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூதமுதலாகிய தன்மாத்திரைகள்
ஐந்தும் ஒடுங்கும் முறையில் ஒன்றனுள் ஒன்றாய் முப்பத்து ஆறு
மெய்யுமொடுங்கும்.

“சத்த முதலைந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.”

சிவத்திற்கோ ஆதியில்லை; அந்தமில்லை; உருவமில்லை; நினைப்பவர்க்கு
நெஞ்சத்துள் மலமற்றவனாய் நிற்கும்; வித்து பிளந்து முளை வெளிவந்து
எங்கும் பரந்து விரிந்து எதிலும் கலந்து நிற்கும்; ஆகையினால், சிவம்,
சத்ததின் உள்ளே சதாசிவமாயும், பிரணவமாகிய ஒளியின் உள்ளே ஈசனாகிய
ஒளியாகவும், ஒளிக்கு ஆதாரமாயுள்ள இருளுக்குள் இருளாகவும், பாலினுள்
நெய்யாகவும், வித்துக்குள் மரமாகவும், எல்லா அணுவுக்குள் அணுவாகவும்
உள்ளான்.

ஆக, சிவமோ, பிரணவமோ, இறைவனோ, எல்லாம் அறிவாகிய உணர்வைப் போல் உருவற்றவன்;
எங்கும் எதிலும் நிறைந்த பொருள்.

“சுருங்கக் கூற எல்லாம் கடந்த சூனியம்.
சூனியத்திலும் இருள்.
ஆக சிவம் இருள் நிறைந்த சூனியம்.”

லக்க லக்கவுக்கு என் பின்னூட்டம்
**************************************
//இந்த இந்து கடவுள ஆராச்சி பண்றப்ப, இந்துயிசத்தை, அந்த ரிக் வேத காலத்திலருந்து கொஞ்சம் பார்த்தோமுன்னா, விஷயம் தெரியும், அதாவது வழிபாட்டுகள்ல தலைவான விளங்கினது, பிரஜாபதி, அதாவது கடவுள், மனிதர்கள் எல்லாருக்கும் தந்தை! அந்த பிராஜாபதியை யாரு பார்த்தது? ஏதோ ஒளி கற்றை, அந்த பிராஜாபதியைதான் பல ரூபமா கொண்டாடினாங்களாம். அதாவது, இந்திரன், வருணன், சூரியன், அக்னி, சோமன், ருத்ரன், யமன் அப்படின்னு. இந்திரன் வீரக்கடவுள், இடி, மின்னல்களோட சம்பந்தபடுத்தி அழைக்கப்பட்டவன். அதாவது, மின்னலை பூட்டிய வண்டியில், இடி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உலவினவன். இந்த இந்திரனை, கிரீக்லயும், ஜெர்மனியிலையும் அப்பவே கொண்டாடினாங்களாம், அதவாது, Zeus God of Greek and Thor of the Germans னு ஒரு கருத்து இருக்காம். இந்த இந்திரனுக்கு வாகணம் வெள்ளையானை! அடுத்தது வருண பகவான், இயற்கையை ஆளுமை கொண்டவன், மிகவும் பரிசுத்தமான கடவுள் ரிக் வேதத்திலே! இந்த வருண பகவானுக்கு பழைய இரானிய மக்களுக்கு மிகவும் வேண்டபட்ட கடவுள், இந்து மதத்தை போல! பிறகு சூரிய பகவான், இப்படின்னு போயிகிட்டு இருக்கு…

பிறகு ஆரம்பிச்சது தான் ஆரிய கடவுள்கள், திருமூர்த்திகள், சிவா, விஷ்ணு, பிரம்மான்னு. உங்களுக்கு எல்லோருக்குமே தெரியும் இந்த கடவுள்களோட புராணங்கள், கதைகள் எல்லாம், சிவபுராணம், தசாவதாரம், இராமாயணம், மஹாபாரதம், அப்படின்னு.. போயிகிட்டு இருக்கும்…
அதே மாதிரி, சக்தி அவதாரம் கதைகளும், அவங்களோட ஒட்டிய சாமிகளையும் உங்களுக்கு தெரியும். பார்வதி, மலைகளின் ராணி, மஹாதேவி, கெளரி, அன்னபூரணி, சரஸ்வதி, அப்படின்னு எல்லோரும் ஆரியமாலங்க! இவங்க கதைகளும், புராணங்களும் நிறையவே தெரிஞ்சு இருக்கும். ஆதிபராசக்தியிலருந்து பொட்டு அம்மன் வரைக்கும், ஏபி நாகராஜன், இராமராஜன் எல்லாம் படமா எடுத்து தள்ளி நம்மல பக்தி வெள்ளத்தில ஆழ்த்திட்டாங்க போங்க! ஆக இவங்களையும் நல்லா தெரியும்.//

தாங்களே சொல்லிவிட்டீர்கள். கதைகள். உருவகப்படுத்தப்பட்டவை. நீதியைக் கதைகள் சொல்லி விளங்க வைப்பதைப் போலத்தான். இத்தனை பேர்களும் குறிப்பது இரண்டைத்தான்.
1.
ஆன்மா எனப்படும் உயிர்(ஆண்பால்)
2.
சக்தி (விந்து சக்தியால் வலுவூட்டப்பட்டவை பெண்பால்)

//பிறகு தமிழக கிராமங்கள்ல அதிகம் கும்பிட படுகிற மாரியாத்தாளையும் நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா.. நம்ம காக்கும் தெய்வங்கள் பத்தி அதிகமா புராணமோ, கதைகளோ வர்றதில்லை, ஏன்? மதுரை வீரன், முனீசுவர்ன், ஆஞ்சனாரு, இப்படின்னு, இவங்க கதைகள் அதிகம் நம்க்கு தெரிவதில்லை.
இவங்க எல்லாம் எல்லை சாமிகள். அந்த ஊரைவிட்டு வேறெங்கேயும் பிரசித்தம் அவ்வளவு கிடையாது.//

தெய்வ வழிபாடு மூலம் எது?

தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்.”

எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர்.
உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக, தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில் மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர்.
இவர்களைக் காவல் தெய்வமாக்கினர். இவர்களுக்கு உருவம் கொடுத்து,
சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள்தான் எல்லைச் சாமிகள். இவர்களைப்பற்றிய கதைகள் முழுமையும் அந்தந்தத் தலைமுறையோடு போய்விட்டது.

//என் கேள்வி என்னான்னா, கிராமங்களை விட்டுட்டு அதிகமா இந்த சாமிக்கோயில்கள் இருப்பதில்லை, ஏன்? அதாவது ஆரியக்கடவுள்கள், திராவிடக்கடவுள்ங்கிற பிரிவுல இது வந்துடுதோ!.//

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர்.
இவர்களைக் காவல் தெய்வமாக்கினர். இவர்களுக்கு உருவம் கொடுத்து,
சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள்தான் எல்லைச் சாமிகள். ஒரு ஊரில் உள்ள வீரனின் கதைகள் அவ்வூருக்கு மட்டுமே தெரியும். ஓரிருவரைத் தவிற. பொன்னர் சங்கர் ஆகியோரை எடுத்துக்கொண்டால் வீரப்பூர், கரூர், நாமக்கல் வட்டத்தில் நன்கு தெரியும். வட ஆற்காட்டில் தெரியாதே. மதுரை வீரன் கதை சோழநாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பிரபலம். சென்னையில் உள்ளோருக்குத் தெரியாதே! ஆரியக்கடவுள்கள், திராவிடக்கடவுள்ங்கிற பிரிவில் இது வருவதாகத் தெரியவில்லை.

//நான் வட நாட்டில இருந்த பொழுதும், அங்கே மேலே சொன்ன, சிவன், விஷ்ணு, சக்தி கோயில்கள் தான் அதிகம். இது மாதிரி மனிதரை மனிதர்கள் காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த சாமிகள் தெக்காலதான் அதிகம். ஏன் அப்படி? இதுதான் திராவிட கடவுள்களா? அப்புறம் இந்த சாமிகளை வேற விதமாத்தான் சித்தரிச்சு காட்றாங்க, அதாவது பேய் விரட்ட, சித்தபிரம்மை தீக்க, அப்படின்னு..//

மேலே விவாதித்துவிட்டோமில்லையா? சிற்றூர்களில் கல்வியறிவற்ற மனிதர்கள் அதிகம். அந்த அறியாமையின் வெளிப்பாடே பேய் விரட்டல், சித்தபிரம்மை தீர்த்தல்.

//இந்த மதுரை வீரன் சாமியை வுட்டுடுவாங்க, ஏன்னோ) அதிகமா பரவலா கும்படறதில்லை, இதன் சரித்திரம் என்ன? ஆரிய அமுக்கமா? எப்படி..//

ஆரியர்கள் அமுக்க வேண்டியதில்லை. அவர்கள் அன்பின் உருமாக சரஸ்வதி, லக்ஷமி, அன்னபூரணி, அப்படின்னு நல்லமாதிரி சாமிகளை உயர்த்திப்பேசி அதற்குரிய கதைகளையும் புராணங்களாக செங்கிருதத்தில் எழுதி வைத்து விட்டனர். எல்லைச் சாமிகளைப் பற்றி அவ்வூருக்குள் மட்டும்தான் பேச்சு. ஆக எல்லைச் சாமிகளைப் பற்றி கதைகள் நிறைய எழுதப்படவில்லை; பிரபலமாகவில்லை.

//இந்த உருவ வழிபாடு வருவதற்கு முன்ன, வேதகாலத்துக்கு முன்ன, நம்ம முன்னோர்கள் உருவ வழி இல்லாம வழிபட்ட அஞ்சு பூதங்கள் வழிப்பாடு ஏன் இப்படி உருவ வழிபாடானாது. //

தெய்வ வழிபாடு மூலம் எது? முதலில் விவாதித்துள்ளோம்.

சிலைவடித்ததால்தானே, நாம் குல தெய்வங்களுக்குச் சிலை வடிப்பதுண்டா? என வினாவெழுப்புகிறோம். ஞானமறியா மக்களுக்குத் தெய்வம் இருப்பதைப்
புரியவைக்கவே சிலை வடிக்கப்பட்டது. உருவ வழிபாடு தோன்றிற்று. இது பாமர
மக்களைப் பொருத்தவகையில் சரி; ஞானப் பாதையில் செல்லுபவர்களுக்குத் தவறு.

சரியும் தவறும், அவரவர் நிலைக்குத் தகுந்தது.

முதலில் தெய்வம் என்றால் என்ன? தெய்வம் மக்களுக்கு எதற்காக வேண்டும்? என்னும் வினாக்களுக்கு விடையறிதல் வேண்டும்.

என்பத்துநான்கு நூறாயிரம் சீவராசிகளில், மனிதனுக்குத்தான் எல்லாம்
தெரியும். தனக்கு வேண்டிய உணவைத்தேடிக்கொள்ள, நோய் வந்தால்
போக்கிக்கொள்ள, கல்வி கற்க ஆகிய எல்லாவற்றையும் செய்ய மனிதனால் முடியும். அப்படியிருக்க, இவனுக்குத் தெய்வம் எதற்கு? பணம் சம்பாதிக்கவா? பணத்தை உண்டாக்கியவனே இவன்தானே? விந்து வெளியேறி நாறிச் செத்தால், நரகமென ஒன்றிருந்தால், அங்கே கற்பகோடிகாலத்திற்கும் அவத்தைப்பட வேண்டியதுதான். அதற்காகவா மனுவுக்கு ஆறு அறிவுண்டாயிற்று? எந்தக் குறை இருப்பினும் பரவாயில்லை. ஏழையாயினும், பிள்ளைப்பேறு அற்றவனாயினும், நோய்நொடியில் அவத்தையுருபவனாயினும், அவன் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. வேறு எது இல்லா விட்டாலும் தெய்வம் கட்டாயம் அவனுக்கு வேண்டும். எதற்காக? எமனிடம் போராடிப் பிறவிப்பிணியைப் போக்கவே இறைவன் வேண்டும். எமபடரை நீக்கிச்
சிவமயமாக்கும் (விந்தடங்கிச் சாவதே சைவம்) ஒரு செயலுக்குத்தான் தெய்வம்
தேவை. சாகாக் கலையாகிய பிரும்மவித்தை யார் கையிலிருப்பினும் அவரே
தெய்வம். அதுவே நிசமான செயல்.

இறைவனின் உருவம் என்ன?

உடலுக்குள் இருக்கும் பிரணவம் எனும் போது அது சத்தத்து ஒலியாகின்றது.
ஆனால் உள்ளத்து ஈசன் ஒளி எனும் போது அந்தப்பிரணவமே கண்புலன் சார்ந்த
ஒளியாகின்றது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூதமுதலாகிய தன்மாத்திரைகள்
ஐந்தும் ஒடுங்கும் முறையில் ஒன்றனுள் ஒன்றாய் முப்பத்து ஆறு
மெய்யுமொடுங்கும்.

சத்த முதலைந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.”

சிவத்திற்கோ ஆதியில்லை; அந்தமில்லை; உருவமில்லை; நினைப்பவர்க்கு
நெஞ்சத்துள் மலமற்றவனாய் நிற்கும்; வித்து பிளந்து முளை வெளிவந்து
எங்கும் பரந்து விரிந்து எதிலும் கலந்து நிற்கும்; ஆகையினால், சிவம்,
சத்ததின் உள்ளே சதாசிவமாயும், பிரணவமாகிய ஒளியின் உள்ளே ஈசனாகிய
ஒளியாகவும், ஒளிக்கு ஆதாரமாயுள்ள இருளுக்குள் இருளாகவும், பாலினுள்
நெய்யாகவும், வித்துக்குள் மரமாகவும், எல்லா அணுவுக்குள் அணுவாகவும்
உள்ளான்.

ஆக, சிவமோ, பிரணவமோ, இறைவனோ, எல்லாம் அறிவாகிய உணர்வைப் போல் உருவற்றவன்;
எங்கும் எதிலும் நிறைந்த பொருள்.

சுருங்கக் கூற எல்லாம் கடந்த சூனியம்.
சூனியத்திலும் இருள்.
ஆக சிவம் இருள் நிறைந்த சூனியம்.”

என் முடிபு:
************

கடவுள் என்று ஒன்று இல்லை.

நம் உடலில் ஓடும் சீவன்தான் சிவன். நம் உடலில் உள்ள சீவசக்தி(விந்துசக்தி)தான் பார்வதி. திருமால்தான் முகுளம்(பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளதால்)

அறிவால் உணர்வைத்தொட்டு அதை நினைவாக்கி அதைக் கருத்தில் ஆணி அடித்து வைத்தால் தெரியும் ஆண்டவனென்னும் கரு. நம்முள்ளேயே உள்ளது.

திரும்பவும் சொல்கிறேன்:

ஞானமறியா மக்களுக்குத் தெய்வம் இருப்பதைப் புரியவைக்கவே சிலை வடிக்கப்பட்டது. உருவ வழிபாடு தோன்றிற்று.
இது பாமரமக்களைப் பொருத்தவகையில் சரி;
ஞானப் பாதையில் செல்லுபவர்களுக்குத் தவறு.

சரியும் தவறும், அவரவர் நிலைக்குத் தகுந்தது.