Tag Archives: சாதி

ஞான வெட்டியான் 1500 – 25

ஞான வெட்டியான் 1500 – 25

##############################

பாயிரம்

25.பிரமகுல வேதியராய்ப் பிறந்தார் கோடி

………பெருமையுள்ள சத்திரியராய்ப் பிறந்தார் கோடி

திறமையுள்ள வைசியராய்ப் பிறந்தார் கோடி

………தெளிவான சூத்திரராய்ப் பிறந்தார் கோடி

உறவதித நால்வகையாய்ப் பிறந்தார் கோடி

………யுள்ளுணர்ந்து பாராமல் தள்ளினார்கள்

அரனருளாற் சபைநிறைந்த வாண்ட மாரே

………யாதியிலே சாதிகுல முரைசெய் வேனே.

 

பிரமகுலமாம் வேதியராயும், பெருமையுள்ள சத்திரியராயும், திறமையுள்ள வைசியராகவும், தெளிவான சூத்திரர்களாகவும் பிறந்தவர்கள் கோடி. உறவு (உற்ற சமயம்) நால்வகையாய்ப் பிறந்தார் கோடி. உள்ளுணர்ந்து பாராமல் தள்ளி வைத்தனர். சபையில் நிறைந்துள்ள ஆண்டைமாரே! அரன் அருளால் முதலில் சாதிகுலத்தைப் பற்றி பொழிப்புரையாம் அறிவுரை தருவேனே.

 

கருத்து வேறுபாடுகளைக் களைய, “தமிழ் உலகம்குழுமத்தில் இவ்விடுகை வெளிவந்தபோது கிட்டிய பின்னூட்டங்கள் சில இங்கே தரப்பட்டுள்ளன:

 

From: “P.N.Kumar <sarabeswar@yahoo.com>” <sarabeswar@yahoo.com>

Date: Mon, 16 Dec 2002 06:15:50 -0000

 

> பிரமகுலமாம் வேதியராயும், பெருமையுள்ள சத்திரியராயும், திறமையுள்ள வைசியராகவும், தெளிவான சூத்திரர்களாகவும் பிறந்தவர்கள் கோடி. உறவு (உற்ற சமயம்) நால்வகையாய்ப் பிறந்தார் கோடி. உள்ளுணர்ந்து பாராமல் தள்ளி வைத்தனர். சபையில் நிறைந்துள்ள ஆண்டைமாரே! அரன் அருளால் முதலில் சாதிகுலத்தைப் பற்றிப் பொழிப்புரையாம் அறிவுரை தருவேனே.

 

அன்புள்ள அண்ணா,

 

பிரமகுலம் என்று பிறப்பால் அமையும் குலம் ஏதுமில்லை. அவ்வண்ணமே மற்ற பிரிவினைகளும். ‘எங்குமுளன், என்றுமுளன்என்னும் மெய்யினை உள்ளுணர்தல் மானுடர் யாவர்க்கும் பொதுவில் அமைந்தது. சென்றவை யாதாயினும், புதுயுகக் கதவருகில் இவற்றையெல்லாம் துறந்து மேற்செல்வோம்!

 

அன்புடன்,

குமார்

ஜாவா

 

**********

அன்புத் தம்பி திரு.குமார் அவர்கட்கு,

வணக்கம்.

>அன்புள்ள அண்ணா,

>பிரமகுலம் என்று பிறப்பால் அமையும் குலம் ஏதுமில்லை.

 

வருணாசிரம தருமத்தில் எமக்கும் ஒப்பிதமில்லை. திருவள்ளுவர், தன்னைக் கீழ்சாதிக்காரனாகவும், சாங்கியங்களில் உழன்றுகொண்டு தன்னை மேல் சாதிக்காரனெனக் கூறிக்கொள்ளுபவர்களை, ஆண்டையெனவும், பார்ப்பான், பிராமணனெனவும் விளித்துத் தன் 1500 பாக்களில் ஞானவிளக்கம் ஈந்திருக்கிறார். இதன் மூலம் உள் மெய் ஞானமடைந்தவனே உயர்ந்தவனெனவும், அறியாதான் தாழ்ந்தவனெனவும் சுட்டுவதாக இயம்பப்பெற்றுள்ளது. பார்ப்பான், பிராமணன், சாதி வித்தியாசம் ஆகியவைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. மனுவை மனிதனாக நோக்குதலே எமக்கியற்கை. பாக்கள் இயற்றப் பட்டுள்ள முறைவிடுத்து மெய்ப்பொருள் ஞானம் புரிதலே நம் கடமை.

எழுதும் முறைகளில் இச்சொற்றொடர்களை விளக்கும் பாங்கில் அருத்தம் அனர்த்தமாகத் தொனிப்பின் குற்றம் என்னுடையதல்ல. மன்னிக்கவும்.

அன்புடன்,

ஞானவெட்டியான்

திண்டுக்கல்(தமிழகம்)

***********

அன்புள்ள அண்ணா,

 

>இதன் மூலம் உள் மெய் ஞானமடைந்தவனே உயர்ந்தவன் எனவும், அறியாதான் >தாழ்ந்தவனெனவும் சுட்டுவதாக இயம்பப்பெற்றுள்ளது.

 

அதுவே உண்மை விளக்கம். அடியேன் முன்சொன்ன பெயரிலாப் பெருநதியின் ஊற்றுக்கண்ணும், உள்நீரோட்டமும். அதற்கு எந்தப் பெயர் கொடுத்து, எப்படி விளித்துக் கொண்டாலும் சரி. கல்லாலமரத்தான் காத்திருக்கும் வழியது. அவன் அடியமர்ந்த அம்மரம் ஏன் கல்லானது என்று அந்த உருவகத்தினை உள்வாங்கி அமைந்திருப்போம்.

 

அன்புடன்,

குமார்

ஜாவா

 

********

அன்புடையீர்,

வணக்கம்.

>அரசியலில் தான் காங்கிரசு போன்ற கட்சிகள் பிரிவிணையை ஊக்குவித்து சிறுபான்மை >மக்களின் ஓட்டுக்களுக்காக அரசியல்தனம் செய்கிறார்களோ அதே போன்று சில >சிறுபான்மை இயக்கங்கள் இந்துக்களை பிராமணன், பிராமணன் அல்லாதவன் என்று >பிரிக்க முயற்சிக்கின்றன

>பொதுவாகவே மதத்தைப் பற்றி அவ்வளவு விருப்புக்கொள்ளாதவர்கள் இந்துக்கள். (சிலர் விலக்காக இருக்கலாம் நான் சொல்ல வருவது கூடுதல் விழுக்காட்டினரை)

>தமிழன் என்று வந்தவுடன் கூட அதில் பிராமணன் பிராமணன் அல்லாதவன் என்று >பிரித்தாளும் போக்கு நிலவுவது வருத்தப்படத் தக்கது. தமிழுலகத்தில் வரும் சில மடல்கள் >அதை மறைவாகத் தனக்குள்ளே வெளிப்படுத்துகின்றன.

******

இம்மின்னஞ்சல் கண்டதும் பகீரென்றிருக்கிறது.

தற்பொழுது தமிழ்உலகத்தில் வந்துகொண்டிருக்கும் ஞானவெட்டியான் 1500″ நூல் முழுவதுமே சாதிப் பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார். கீழ்சாதிக்காரன் தன் ஆண்டையை நோக்கி, “ஞான விளக்கம்

கொடுப்பதாக உள்ளது.

மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்என்னும் கோட்பாடுடைய பலர் நம் இணையத்தில் உள்ளனர்.

எம்மதமும் சம்மதமே

நாமத்தை நீக்கித் தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்

எப்பொருள் யார்………….மெய்ப்பொருள் காண்பதறிவு.”

மனுவை மனுவாக மதி.”

இதை மனத்திற்கொண்டு, “ஞானவெட்டியான் 1500″ தொடரவேண்டுமா? இல்லயா? என்பதற்கு தமிழ்உலகம்தான் விடை கூறவேண்டும்.

அன்புடன்,

ஞானவெட்டியான்

திண்டுக்கல்(தமிழகம்)

*********

அன்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு,

 

> இம்மின்னஞ்சல் கண்டதும் பகீரென்றிருக்கிறது.

 

எந்த அஞ்சலுக்கும் அஞ்சேல்!

மின்னஞ்சலுக்கு அஞ்சுவது பேதமை

அஞ்சல்களில் கொஞ்சுவதே தோழமை!;-)

 

> தற்பொழுது தமிழ்உலகத்தில் வந்துகொண்டிருக்கும் ஞானவெட்டியான் 1500″ நூல் >முழுவதுமே சாதிப் பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார். >கீழ்சாதிக்காரன் தன் ஆண்டையை நோக்கி, “ஞான விளக்கம்கொடுப்பதாக உள்ளது.

 

அந்த ஞானத்தை வெட்டி வெட்டி வழங்குவதால்தானே தமிழுலம் தங்களை ஞானவெட்டியாரென அழைக்கிறது!;-)

 

> “மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்என்னும் கோட்பாடுடைய பலர் நம் >இணையத்தில் உள்ளனர்.

 

தமிழுகலத்தின் உயிர்மூச்சே அதில்தானே அடங்கியுள்ளது!

 

> “எம்மதமும் சம்மதமே

 

உங்கள் மதம் உங்களுக்கென்ற எங்கள் சம்மதமும்; எங்கள் மதம் எங்களுக்கென்ற உங்கள் சம்மதமும் சம்மதிக்கும் சம்மதமே நம்மதம்!;-)

 

> “நாமத்தை நீக்கித் தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்

 

தத்துவங்களை உணருவது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டுமென்பதே எங்களின் நோக்கமும்!

 

> “எப்பொருள் யார்………….மெய்ப்பொருள் காண்பதறிவு.”

 

அதெற்கெல்லாம் விசாலமான மனமும் எண்ணங்களும் பார்வைகளும் வேண்டும் என்பதே என் அறிவு.

 

> “மனுவை மனுவாக மதி.”

> இதை மனத்திற்கொண்டு, “ஞானவெட்டியான் 1500″ தொடரவேண்டுமா? இல்லயா? >என்பதற்கு தமிழ்உலகம்தான் விடை கூறவேண்டும்.

 

அண்ணே, “ஞானவெட்டியான் 1500″ எந்தத் தடையுமில்லாமல் ஒலிச்சுக்கிட்டே இருக்கட்டும். இடையிடையே பரமன்களும் சுலைமான்களும் எழுதிப் பறிமாறிக் கொண்டிருக்கும் விசயங்களால நீங்க சஞ்சலம் அடையக் கூடாது….

நாங்க ஒண்ணும் போராளிங்க கிடையாது; வியாபாரிங்க!;-)

சந்தடி சாக்குல அவரு சரக்கை அவரும்; என் சரக்கை நானும் கூவி விற்போம்!;-)

இது சண்டைக்கடையல்ல; சந்தைக் கடை!

சில பேரு விரும்பிப் பார்ப்பாங்க; சில பேரு திரும்பிக்கூடப் பார்க்காமப் போயிடுவாங்க!

சில பேரு நிண்டி விடுவாங்க..;-)

அவங்களுக்கும் பொழுதுப் போக வேண்டாமா என்ன!?;-)

இது எதையும் நீங்க கண்டுக்கிடாதீங்க….

உங்கள் பொருளை வாங்குவதற்கென்றும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்அவர்களுக்காக நீங்கள் கூவிக் கொண்டே இருக்கலாம்!

 

அன்புடன்

தம்பி

சுலைமான்.

****************

வேண்டுகோள்