Tag Archives: சிவன் உதித்தல்

பிரபுலிங்க லீலை-1.18

1.18.பரமசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி
உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கத் தன்னின்
வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைப்பொ ருந்தும்
அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.

திரிவு – மாறுபாடு,
உரைமனம் இறந்துநின்ற – வாக்கையும் மனத்தையுங் கடந்துநின்ற.

சிவலிங்கத்தினின்றும் சதாசிவன் தோன்றுவன்.
ஞானசக்தி அவனைப் பொருந்துதலால் சிவன் தோன்றுவன்.