Tag Archives: தத்துவங்கள் – 96

ஞான வெட்டியான் 1500 – 26

ஞான வெட்டியான் 1500 – 26                                   ###############################

பாயிரம்

26.எங்கள்குலஞ் சுக்கிலத்தா லெடுத்த வாறு
………மெண்ணரிய சுறோணிதத்தால் வளர்ந்த வாறு
மங்காத வஞ்செழுத்தால் வந்த வாறும்
………வகையுடனே வங்குலமோ தொண்ணூற் றாறு
சிங்கார மானமனம் புத்தி சித்தம்
………செங்கனலாற் கொண்டெழுந்த வாங்கா ரந்தான்
கங்கையணி சங்கரனா ரம்பி கைப்பெண்
………கருத்தாலே யெடுத்ததிந்தக் காய மாண்டே.

எங்கள் குலமும், சுக்கிலத்தால் எடுத்தது, எண்ணுதற்கு அரிய சுறோணிதத்தால் வளர்ந்தது, மங்காத ஒளி வீசும் ஐந்தெழுத்தால் வந்தது. எங்கள் உடலோ, எங்கள் கையளவில் (சாண்) தொண்ணூற்றாறு. எங்களுக்கும், மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் முதலிய அந்தக்கரணங்களும் உண்டு. சடைக்கற்றையில் கங்கை தாங்கிய சங்கரனும், அம்பிகையும் கொண்ட சங்கற்பத்தாலேயே இவைகள் யாவையும் கொண்டு இந்தச் சரீரம் எடுத்ததாகும். ஆக, நாங்கள் எவ்வகையில் தாழ்ந்தவர்?

ஈங்கு, ஐந்தெழுத்தாம் பஞ்சாக்கரத்தின் மகிமையையும், தத்துவங்கள் தொண்ணூற்றாறையும் விளக்கியுள்ளார்.

தத்துவங்கள் – 96

பூதங்கள்

5

கர்மேந்திரியங்கள்

5

கர்மேந்திரிய விடயங்கள்

5

ஞானேந்திரியங்கள்

5

தன் மாத்திரைகள்

5

அந்தக்கரணம்

5

நாடிகள்

10

வாயுக்கள்

5

உபவாயுக்கள்

5

ஆச்ரயங்கள்

5

கோசங்கள்

5

ஆதாரங்கள்

6

தோட()ங்கள்

3

ஈட()ணாத்திரங்கள்

3

குணங்கள்

3

துர்குணங்கள்

14

வினைகள்

2

அவத்தைகள்

5

ஆக மொத்தம்

96