Tag Archives: நாடிகள்

ஒளவைக் குறள் – (31-40)

1. வீட்டுனெறிப்பால்
*********************
4. நாடி தாரணை (31-40)
*************************
31.எழுபத் தீராயிர  நாடி யவற்றுள்
முழுபத்து  நாடி  முதல்.

உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.

பூரணமான பத்து நாடிகள் :

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பர்.

வளி (காற்று) பத்து :

உயிர்வளி, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவி (கெட்ட ஆவி), இமைக் காற்று, வீங்கற் காற்று. இவைகளை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனக் கூறுவரும் உண்டு.

இவற்றை திருமூலர்,

“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்” என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.
நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.

தலயில் …………. 7,000
வலது காதில் ……. 1,500
இடது காதில் …….. 1,500
வலது கண்ணில் … 2,000
இடது கண்ணில் …. 2,000
மூக்கில் …………. 3,330
பிடரியில் ………… 1,000
கண்டத்தில் ……… 1,000
வலது கையில் ……. 1,500
இடது கையில் ……. 1,500
தொண்டைக்கும்
நாபிக்கும் மத்தியில் 8,990
பிடரியின் கீழ் ……… 8,000
விலாவில் ………… 3,000
கால்களின் சந்தில் … 8,000
பீசத்தின் மேல் …….. 2,000
பீசத்தின் கீழ் ……….. 2,000
பாதத்தில் …………. 1,000
பிடரிக்குப் பின்னால் 3,680
கோசம் …………… 13,000
***********
ஆக நரம்புகள் ……. 72,000
***********

பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்

தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை – வாத நாடி

பிங்கலை – பித்த நாடி

சுழிமுனை – சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி.

சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை – அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.

உணர்வாலுணர்வது பிண்டம்.

நினைவால் உணர்வது சூக்குமம்.

கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை – உள்நாக்கு நரம்பு

புருடன் – வலக்கண் நரம்பு

காந்தாரி – இடக்கண் நரம்பு

அத்தி – வலது காது நரம்பு

அலம்புடை – இடக் காது நரம்பு

சங்கினி – ஆண்(பெண்) குறி நரம்பு

குகு – குத நரம்பு

ரக்தவியானன் – இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை

வெளித் தள்ளும் நரம்பு.

32.நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.

நரம்பென்று   அழைக்கப்படும்   இந்த நாடிகளுக்கு எல்லாம் சக்தியைக் கொடுக்கும் நாடி ஒன்றுண்டு.

33.உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.

(உந்தி = நாபியென்பர் சிலர். ஆயினும் உந்தியென்பது  உன்+தீ என் விரிவடையும். உன்னுடைய (ஆன்ம)தீயே உந்தி.   உறு = பொருந்திய;
பரிந்து = தாயன்புடன் பரிந்து; பந்தித்து= உறுதியாக நிலைத்து நின்று; )

உந்தி, நாபி, உந்திக்கமலம் எனும் பதங்கள் குறிப்பவை ஓங்காரத்தின் மத்திய பகுதியாகிய மணிபூரகமே. உந்தி முதல் உச்சிவரை உறுதியாக நிலைத்து நிற்பது ஆதி நாடியே. இதைக் குண்டலினி என்பர்.

34.காலொடு கையி  னடுவிடத்  தாமரை
நூல்போலு  நாடி நுழைந்து.

இவ்வோங்கார ஆதி நாடியானது, கைமுதல் கால்வரை தாமரை நாளத்தின் நூல்போல் உள்நுழைந்து பரவியிருக்கின்றது.

வசிட்டக்காரர் :

“அறவிந்தவளைய நூலொன்றைக் கூறோ ராயிரமிட்டதிலொரு கூறாப்பென்றாலுந் தறமொவ்வாதறச் சிதறியுண்டாய் நின்றுந்தாக்கி யறிவரிதவற்றின் கதியின் றன்மை.”

இவ்விடத்து கதி என்பதை மூச்சோட்டம் எனக்கொள்வர் ஆன்றோர்.

21.நாடிகள்

தசநாடிகள்:

திருமந்திரம்:

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்

ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடுங்

கூடிய காமங் குளிக்கும் இரதமும்

நாடிய நல்ல மனமும் உடலிலே.”

நாடிகள் பத்து: விவரம்:

இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு கியவை களை முறையே:

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு என்பர்.

அதேபோல் வளி பத்து:

உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பன.

இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பர்.

வாயு எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பல மருமப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன.

தாங்கள் கூறியபடி, இதே காற்றுதான் பல்வேறு பெயரெடுக்கின்றன. அருவிநீர் ஓடிவருமிடங்களிலுள்ள நிலத்தின் வண்ணம் பெருமாப்போல். வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம்.

1.பிராணவாயு: இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.

2.மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் கியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.

3.தொழில்காற்று: இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.

4.ஒலிக்காற்று: இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.

5.நிரவுக்காற்று: இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும்.

இவ்வாறே மற்றவையும்.

யினும், இவ் வாயு எங்கிருந்து மனுவுக்கு வந்தது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். னால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. னால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து(மருமம்) பிச்சு அடிக்கும் வி தான் சுவாசம். இதுவே மூல வாயு. 1.பிராணவாயு: இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.

2.மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் கியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.

3.தொழில்காற்று: இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.

4.ஒலிக்காற்று: இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.

5.நிரவுக்காற்று: இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும்.

இவ்வாறே மற்றவையும்.

யினும், இவ் வாயு எங்கிருந்து மனுவுக்கு வந்தது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். னால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. னால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து(மருமம்) பிச்சு அடிக்கும் வி தான் சுவாசம். இதுவே மூல வாயு.

இச் சலனத்தைதை இயக்குவது நாடி. நாடி நரம்பென வைத்தியர்கள் கூறுவது. உடலினுள்ளே உள்ள நரம்புகளின் பரிமாணத்திற்கேற்ப இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. அப்பொழுது ஏற்படும் அசைவே துடிப்பு.

நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை தெரியும்.

சிகுவை உள்நாக்கு நரம்பு.

புருடன் வலக்கண் நரம்பு.

காந்தாரி இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)

அத்தி வலது காது நரம்பு

அலம்புடை இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)

சங்கினி மருமத்தான நாடி

குகு மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்) இச் சலனத்தைதை இயக்குவது நாடி. நாடி நரம்பென வைத்தியர்கள் கூறுவது. உடலினுள்ளே உள்ள நரம்புகளின் பரிமாணத்திற்கேற்ப இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. அப்பொழுது ஏற்படும் அசைவே துடிப்பு.

நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை தெரியும்.

சிகுவை உள்நாக்கு நரம்பு.

புருடன் வலக்கண் நரம்பு.

காந்தாரி இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)

அத்தி வலது காது நரம்பு

அலம்புடை இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)

சங்கினி மருமத்தான நாடி

குகு மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)

பிரபஞ்சத்திலிருந்து மூலப் பிரகிருதி முந்நிறத்தில் (வெண்மை, சிவப்பு, கறுப்பு)தோன்றியது. அவைகளே, முச்சக்திகள்.

மாயா(வெண்மை) சக்தி; அவித்யா(சிவப்பு) சக்தி; பரண விஷேப(கறுப்பு) சக்தி. இவைகள் முறையே, மாயை, அஞ்ஞானம், அகங்காரம் எனக் கூறினர். மாயா, சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும். அதில் பரப் பிரும்மம் பிரதிபலிப்பதினால் தோன்றிய பிரதி பிம்பமே, ஈசுவரன். இதுவே முதல் சலனம்.இச்சலனத்தினாலுண்டாகிய சலனச் சங்கிலியால் பிரபஞ்சம் உண்டாகி இயங்கி வருகிறது.

முதல் சலனத்தால், பிரபஞ்சம் இரண்டாகியது. முதற் பாகம் சமஷ்டி(ஒன்றாயிருத்தல்) காயம்; இரண்டாம் பகுதி வியஷ்டி(வெவ்வேறாயிருத்தல்)காயம். வியஷ்டி காயத்தை நான்கு பகுதிகளாக்கி,அவற்றுள் முதல் பாக வியஷ்டி காசத்தைக் வாயுவொடு சேர்த்தபோது மனத்தத்துவம் பிறந்தது; அக்கினியொடு சேர்த்தபோது அறிவுத் தத்துவம் பிறந்தது; நீரொடு சேர்த்தபோது சித்தம் பிறந்தது; நிலத்தொடு சேர்த்தபோது அகங்காரம் பிறந்தது. இதுதான் ஐம்பூதங்களின் சலனக் கலவை.

இச்சலனத்தாலேதான், மற்ற சலனங்கள் உண்டாயின.

வாயுவும் சலனத்துள் ஒரு பாகம்.

வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்).

வாயுவின் வீடு கழுத்துக் கண்டம். அதுவே நடு மூலம்.

வாயு இல்லையேல் மூச்சில்லை; உயிரில்லை; சலனமில்லை.

காசம் வாயுவொடு சேர்ந்தபோது மனம் பிறந்தது; மனமே நாட்டங்களுக்குக் காரணம்.

அக்கினியொடு வாயு சேர்ந்தபோது அறிவு பிறக்கின்றது. க வாயு அறிவில் செயல்பட்டு வருபவைகளை நாட்டம் எனக் கூறவியலாது.

மனமே நாட்டங்களுக்கு மூலகாரணம்.

பிங்கலை இடகலை சுழிமுனை குகுநாடி என்பவை எல்லாம் கற்பனையே. இம்மாதிரி நாடிகள் இருப்பதாக மருத்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வெளிமூச்சுக் காற்று உள்ளே நுழையவும், ஈரலுக்குள் சென்று திரும்பி வரவுமே மூச்சுக்குழல் இருக்கிறது. மற்றபடி வாயுவின் பெரும்பகுதி கபாலக்குகையினுள்ளே போய் அங்கிருந்து உடலின் பலபகுதிகளுக்கும் பரவி விடுகிறது. அதனால்தான் இறந்ததும் சவத்திற்கு உடல் ஊதிவிடுகிறது. கவே, நாடிகள் உடலினுள்ளே இருக்கும் நரம்புமண்டலங்களின் துடிப்பேயாம். அதையே, கிராமங்களில், இழவு வீட்டிற்குச் சென்றால், “நாடி எப்போ அடங்குச்சு?” எனக் கேட்பது வழக்க. நாடி என்றால் நோக்கி என்ற பொருள் உண்டு.

, உடலில் சலனமில்லையேல், நாடி அடங்கிவிடுகிறது.

அண்டத்தில் சலனம் வாயுவால்தான். இது புறச் சலனம். பிண்டத்திலும் வாயுவால்தான் சலனம். இது அகச் சலனம். இது இருவகை. அகம் எனில் மனம். மனச் சலனமும் அகச் சலனம்தான். உடல் சலனமும் அகச் சலனம்தான்.