Tag Archives: நாதவிந்து

ஞான வெட்டியான் 1500 – 40

ஞான வெட்டியான் 1500 – 40
##############################

தத்துவ உற்பத்தி
##################

40.பூணநூல் தரித்துக்கொள்வோம் சிவசிவ
………பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்வோம்
வேண விருதுகளும் விசி(கி)தமாய் வெண்குடை
………வெண்சாமரமும் பிடித்துக்கொள்வோம்
வானவர் முனிவர் தொழும் பொன்விசிறி
………மரகத குண்டலத்தின் கவசங்களும்
ஞானப்பிர காசவொளி திவ்வியரச
………நாதவிந் தர்ச்சனைகளில் நாம்துதிப்போம்.

நாங்கள் பூணூலைத் தரித்துக்கொள்வோம். ஐம்பொறிகளையும், ஐம்புலன்களையும் தொழுது வணக்கம் செய்வோம். வேண்டிய விருதுகளையும், வெண்கொற்றக்குடை, வெண்சாமரம் இவைகளைப் பிடித்துக் கொள்வோம். தேவர்களாலும், முனிவர்களாலும் தொழப்படுகின்ற பொன்னாற் செய்யப்பட்ட விசிறியையும், மரகதத்தால் செய்யப்பட்ட கவச குண்டலங்களையும் பெற்றுக் கொள்வோம். ஞானப்பிரகாச ஒளி வீசும் நாத விந்துகளுக்கு அர்ச்சனை செய்து துதிப்போம்.

ஞான வெட்டியான் 1500 – 16

ஞான வெட்டியான் 1500

##########################

பாயிரம்

16.திருவிருந்து கனலெழுந்து ஆடும்வீடு

………சிறந்தசத்தி வல்லபைதன் கணவ னான

மருவிருந்து கொஞ்சு தமிழ் நாவில்மேவு

………மகிழ்ந்த மதகரி யினிரு தாளைப் போற்றி

கருவிருந்த பெருவீடு தாண்டி யப்பால்

………கண்குளிர நின்று நடுவணையி லேறி

மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம் வணங்கியிந்த

………நூல் வகையைப் புகல்வே னாண்டே.

இலக்குமியானவள் எழுந்தருளி இருந்து அக்கினியுடன் காக்கும் வீடும், சக்தி வல்லபையின் தமிழ் கொஞ்சும் இதழ்களில் பொருந்தும் மதகரியாம் கணேசனின் இருதாள் போற்றிகரு உதிக்கும் விந்து வீட்டைக் கடந்து அப்பால் ஞானக் கண் குளிர நின்று நடுவணையில் ஏறி நாதவிந்து சொரூபியாம் ஆதியின் திருவடிகளை வணங்கி, இந்நூலின் வகையைச் சொல்வேன் என் ஆண்டே (எசமான்).