Tag Archives: பழமொழி நானூறு

பழமொழி நானூறு – 1.6

1.6 உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்னும்

கிணற்)று) அகத்துத் தேரைபோல் ஆகார் கணக்கினை

முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்

கற்றலின் கேட்டலே நன்று‘.

நன்னீர் குடிதண்ணீர்

உழி இடம்

கணக்கு நூல்கள், வரையரறை

முனியாது வெறுப்படையாது

குடிப்பதற்கு இனிய உவர்ப்பற்ற நல்ல குடிநீர் வேறு இடங்களில் இல்லை என நினைக்கும் கிணற்றில் வாழும் தேரையைப் போல் கருதாது, நூல்களை நாள் முழுவதும் வெறுப்பில்லாது பொறுப்புடன் மனமுவந்து இனிதாகப் படித்து அறிதலைக் காட்டிலும், கற்றறிந்த அறிஞர்களின் வாயிலாக விரும்பிக் கேட்டலே நல்லது.

பழமொழி: கற்றலின் கேட்டலே நன்று”