Tag Archives: பழமொழி நானூறு – 6.47

பழமொழி நானூறு – 6.47

6.47 நெடியது காண்கிலாய் நீயொளியை; நெஞ்சே!

கொடியது கூறினாய் மன்ற அடியுளே

முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் கண்டு விடும்‘.

நெஞ்சே! தீய செயல்களைப் பிறருக்குச் செய்யுமாறு கூறினாய். ஆதலால், நீ அறிவு இல்லாததால், பிறருக்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை நெடுங்காலத்துக்குப் பின் அறியாய். அந்த நிலையிலே, பிறன் ஒருவனுக்கு முற்பகலில் செய்தால், தனக்கு பிற்பகலில் வரும் தீங்கினைத் தப்பாமல் அடைவான்.

திருக்குறள்:

பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.”

பழமொழி:
***************
முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்.“