Tag Archives: பழி

பழமொழி நானூறு – 5.40

5.40 கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்(து) ஈண்டிய

கல்தேயும் தேயாது சொல்.’

வடு பழி

பெரிய சக்கரவளாகமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரை உடைய கடலால் வரையறுக்கப்பட்ட பூமியில் தொக்கமலைகள் தேய்வடையும். பழிச் சொல் மாறாது. ஆகவே, தீங்கு செய்து பழி அடையும் சூழ்நிலையிலும், தனக்கு ஒரு சிறிதும் பழியைப் பயவாத செயல்களைச் செய்வதையே ஒவ்வொருவரும் விரும்பவேண்டும்.

பழமொழி

***************

கல்தேயும் தேயாது சொல்.’

பழமொழி 400 – 5.40

பழமொழி 400 – 5.40
**********************
கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல்தேயும் தேயாது சொல்.

நெடுவரை பெரிய மலைகள்
முற்றும் சூழப்பட்ட
ஆழி கடல்
வடு பழி

பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரையுடைய கடலால் சூழ்ந்த உலகிலே, மலைகள் தேய்வடையும்; பழிச்சொல் மாறாது. ஆகையால், இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை அடைவதைக் காட்டிலும் தனக்கு ஒருசிறிதும் பழியைப் பயவாத செயல்களையே ஒவ்வொருவனும் விரும்புதல் வேண்டும்.

தான் அழிய நேர்ந்தாலும் பழியொடு பட்டவைகளைச் செய்யவேண்டாம்.

பழமொழி
*************
கல்தேயும் சொல் தேயாது.”