Tag Archives: பிரமர்

பிரபுலிங்க லீலை – 2.35

நான்முகர்கள் வருதல்
********************

2.35 முகங்கள் நான்கிலும் நான்மறை விதிமுறை முழங்க
உகந்து கையிரு நான்குநான் குச்சியிற் குவியச்
சகந்த ருஞ்செயற் பிரமர்கள் அளப்பிலர் தையல்
பகுந்த மேனியன் அவையிடைப் புகுந்தனர் பரவி.

விதிமுறை – சட்ட திட்டங்களின் பாடல்
உகந்து – விரும்பி, உயர்ந்து
சகம் தரும் – உலகங்களைப் படைக்கும்.
பகுந்த – பகிர்ந்த, பங்குகொண்ட.
தையல் – இறைவி.
பரவி – புகழ்தல், வணங்கல்

நான்கு முகத்தாலும் நான்கு வேதங்களின் பொருட்கள் முழங்க, நான்கு தலை உச்சியிற்மேல் குவித்த எட்டுக் கைகளுடன் உலகங்களைப் படைக்கும் பிரமர்கள் அளவிட முடியாத அளவு இறைவி பங்குகொண்ட இறைவனின் அவையில் புகழ்ந்து வாழ்த்திப் புகுந்தனர்.