Tag Archives: பிறரையும் தம்மைப்போல் நினைக்கவேண்டும்.

பழமொழி நானூறு – 6.45

6.45 வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு

நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்

புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்!

தனக்கின்னா இன்னா பிறர்க்கு.’

புனம் கொல்லை, வயல்

அவிர் ஒளி, பீறல், புல்

சுணங்கு தேமல், மெலிவு

கொல்லையில் கிடக்கும் ஒளிவீசும் பொன்போன்ற தேமலை உடைய பூங்கொம்பை ஒத்தவனே! தனக்குத் துன்பம் தருவன பிறருக்கும் துன்பத்தை தரும். ஆகவே, செய்யும் செயலில் பயன் சிறிதும் இல்லாமல், பகைமயை மட்டுமே மனதில் கொண்டு, ஆராய்ந்து பிறர் வருந்தத் தக்கனவற்றை செய்யாதிருத்தல் வேண்டும்.

பிறரையும் தம்மைப்போல் நினைக்கவேண்டும்.

திருக்குறள்:
******************
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.”

பழமொழி:
****************
தனக்கின்னா இன்னா பிறர்க்கு.’