Tag Archives: மனம்

49.மனம்


ஏ மனுவே! நீ பெயரும் புகழும் அடையவேண்டித்தானே தான தர்மங்கள் செய்கிறாய். உண்மையில் அது உனக்குத் துன்பங்களை அதிகப்படுத்துகிறது என்பதை மறவாதே! உலக நலனுக்காகச் செய்கிறேன் என்று நீயே உனக்கு உதவிக் கொள்கிறாய். அதையும் நான் அறிவேன். பெயரும் புகழும் கேட்டைத்தான் விளைவிக்கும். உன்னை நீயே கெடுத்துக் கொள்ளாதே. முதலில் உன் மனதைக் கட்டுப்படுத்து. அது தெரியாத உனக்கு நிமிடத்துக்கு நிமிடம் துன்பங்களும் துக்கங்களும் வருமென மறவாதே! இவ்வுலகம் கானல் நீர். அது தாகத்தைத் தணிக்காது. நீ காணும் ஒன்றும் சத்தியமாக இல்லை. அது மாயை. அனைத்தும் அழியக்கூடியதாம். அழியக்கூடிய உலகில் சுகத்தை அநுபவிக்க உன் மனம் கடல் அலைபோலத் தத்தளிக்கிறது. மனதையடக்கு. மனம் போன போக்கெல்லாம் போகாதே! மனத்தை வென்றால் உனக்குள் உள்ள ஆன்மா ஒளிவீசும் சோதியாகத் தெரியும்.

நீ பரிசுத்தனாக இல்லாததால் உன் மனம் அடங்கமாட்டேன் என்கிறது. உனக்கு சித்திகள் கைவரவேண்டும் எனும் அவா உள்ளுக்குள் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே கொடிய விரோதி. மனோசக்திகளால் சித்திகள் பெருபவன் சித்திகளுக்கே அடிமை ஆகிவிடுகிறான். ஏதோ ஒரு சித்தி கிட்டியதும், தன்னை மறந்து அகங்காரங்கொண்டு திமிர் பிடித்து அலைகிறார்கள். சித்திகளின் பிடியிலிருந்து விடுபடமுடியாது அடுத்த பிறவி எடுக்கிறார்கள்.

மனம் – கற்பனைகளின் தாய்
********************************
உன் அறிவால் அறிந்த உண்மைகளை ஏன் அநுபவத்திற்குக் கொண்டுவரத்
தயங்குகிறாய்? அநுபவம் வராதவரை நீ படித்த முட்டாள் என அநுபூதியுள்ள
சித்தர்கள் ஒதுங்குவார்கள். உன் அறிவுக்கும் அறிவான மெய்ப்பொருளை நீ
அறிந்து அநுபவத்திற்குக் கொண்டு வருவதே அநுபூதி. தன்னிலும் வேறாக ஒன்றுமில்லை.உலகத் தோற்றமே ஒரு கற்பனைதான்.

கற்பனையை ஏமாற்றக் எதிர்மறைக் கற்பனையே சிறந்த வழி என்பது ஒரு சாராரின் கருத்து. எடுத்துக்காட்டு:

MATRIX படம் பார்த்தீர்களா? அதில் ஒரு சிறுவன் ஒரு கரண்டியைத் தன்
பார்வையால் வளைத்துக் கொண்டிருப்பான். கதாநாயகன் நியோ அதைப் பார்க்க அச்சிறுவன், “என் கையில் கரண்டி இல்லை. அது அப்படியே இருந்தாலும் வளைவது இல்லை. நீதான் வளைகிறாய். இது ஒரு கற்பனை” என்பான்.

இன்னுமொரு வழி:
மனமே கற்பனைகளை உற்பத்தி செய்யும் தாய். நீ எதையும் கற்பனை செய்யாதே. அப்படிச் செய்தால் கற்பனை கடந்த சோதி உனக்குள் மறைந்துவிடும். உன்னை மறைப்பது கற்பனையே. மனதில் எதுவும் இருக்காத நிலையே அறிவை உணரும் நிலை. கற்பனைகளைத் தியாகம் செய்துவிடு. பரிபூரண நிலைக்குச் செல்ல அதுவே சிறந்த வழி.

6.மனம் என்பது ஆன்மாவா?

6. மனம் என்பது ஆன்மாவா?
*********************************
மனம்:
*******
முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று
பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்)
என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய
ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ
ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு.

ஆனால் மனத்தை ‘ஸ்விட்ச் ஆ·ப்’ செய்துவிட்டால், மற்ற உறுப்புக
ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி
ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம்
தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு
இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா.

மனம்தான் இவற்றின் ஓட்டுநர்.

இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின்
உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது ‘உள்’ உறுப்பு. அவ்வளவுதான்.
‘இந்த உடல்தான் நான்’ என்ற எண்ணம் இருக்கும்வரை
ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல.

ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து
கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை
அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக்
கித் திருப்ப வேண்டும்.

மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே
மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர்
வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர்
வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள்.