Tag Archives: முப்பாழ்

ஞான வெட்டியான் 1500 – 34

ஞான வெட்டியான் 1500 – 34
###############################

தத்துவ உற்பத்தி
##################

34.ஆதியந்த முங்கடந்து ஆதாரமூலம்
………அதுகடந்த பரவெளி தாண்டி
நீதியின் மறைவிளங்கும் முப்பாழ்கடந்து
………நின்றபரி பூரணத்தின் நிலைகடந்து
ஓதுமறை வேதமுந்தாண்டி பிரகாசவொளி
………ஓங்கார ரீங்காசனத்தி லுறுதியதாய்ச்
சோதியின் நிலையில்நின்று சுழிமுனையில்
………துதித்துத்தொழுத சாம்புவன் காணும்.

ஆதி அந்தங்களையும், ஆதாரமூலம், பரவெளி, நீதியுள்ள வேதங்களில் விளங்குகின்ற முப்பாழையுங் கடந்து நின்ற பரிபூரணத்தின் நிலையையும் கடந்து வேதத்தையும் தாண்டி பிரணவம் என்னும் சிங்காசனத்தில் உறுதியாக சோதி நிலையில் நின்று சுழிமுனையில் துதித்துத் தொழுத சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) நானேயாவேன்.

வேண்டுகோள்