Tag Archives: மெய்

41.பொய்” யான உடலை ஏன் மெய்” என்கிறோம்?

இந்த பொய்” யான உடலை ஏன் மெய்” என்று அழைக்கின்றோம்?
**************************************************************************
மெய் = மெய்யெழுத்து, உடல், உண்மை(உள்+மெய்)
இந்த உடலை(மெய்யாகவிருந்தும்)ஏன் பொய் என்கிறோம்?

உடல் அழியும். நிலையில்லாததால் மெய் பொய்யாகிறது.

ஆனால் மெய் (உடல்) , மெய்யே!
என்ன இது குழப்பம்என நினைக்கிறீர்களா?

“தேகமென்னுஞ் சிவாலய மாமதிற்
சென்னி சிறுவாயிற் கோபுரமாம்
காகமான விரண்டு கரக்கோடுங்
கையாங் கேளடி ஞானப் பெண்ணே.” (ஞானக் கும்மி)

உடல் சிவாலயம்.ஏனெனில் சிவனாம் சீவன் இருப்பிடம்.
சென்னியாம் தலை சிறு வாயிலின் கோபுரமாம். இவ்வளவையும் தாங்கி நிற்பதால் மெய் மெய்யே.
அதன் நிலையற்றதன்மையை குறிக்குங்கால் அது பொய்.