Tag Archives: விந்து

சிவ வாக்கியம் – 86

சிவவாக்கியர் பாடல்கள் – 86                                  ********************************************

86.இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே

அறிவினா வடுத்தகாய மஞ்சினா லமர்ந்ததே

கருவிநாத முண்டுபோய் கழன்றவாச லொன்பதும்

ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே.

 

கருவி = பொறியும், அந்தக்கரணங்களும்;

கருவி கழலுதல் = பலம் கெடுதல்; நாதம் = விந்து

 

தில்லையம்பலத்திலே உறையும்(எழுந்தருளியிருக்கும்) இறைவனால் ஐந்து பூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் மாடமாகிய உடல் உருவாக்கப்பட்டது. அதில் நாதமாகிய விந்து பெலம் குன்ற(குறைய), பொறிகளும் அந்தக்கரணங்களும் பெலம் குன்றி சீரழிந்துவிடும். அப்படி விந்து நாதம் பெலம் குன்றாது, ஒன்பது வாயில்களை ஒன்று சேர அடைத்து, சீவனாகிய சிவனை உடலுக்குள் செலுத்தவேண்டிய இடத்தில் மாத்திரம் செலுத்துபவர்கள் கோடியில் ஒருவரே.

சிவ வாக்கியம் – 5

சிவவாக்கியர் பாடல்கள் – 5                                  ********************************************

5.என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

இப்பாடலின் கரு ஏக இறையைக் குறிக்கிறது. ஏக இறைதான் ஆதி. விந்துவே ஆதி. இவ்விடத்து, பீர் முகம்மது அவுலியாவின் ஆநந்தக் களிப்பின் ஒரு பாடலை நினைவு கூருதல் அவசியம்.

இவ்வென் றெழுத்ததைப் பற்றி இரு வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக்
கொல்லன் றுத்திகொண் டூதி நல்ல கோவலமாய் மூலக் குகையை யெழுப்பி

வில்லின்மேல் நாணம்பை யேற்றி வெகு வேகமா யொன்பது வாச லடைத்து
அல்ஹம்தி லொன்றாகி நின்ற நந்தம் ஆதியை நன்றாகக்
கண்டு கொண்டேனே.”

ஆதி என்னும் சொல்லுக்கு ஒலியியலின்படி ஆன்மத் தீ என்னும் பொருள் வரும்.

+தீ=ஆதீ. ஆதீ தான் ஆதியாயிற்றென்பர். என்னுள்ளே இருந்த இவ்வான்மத் தீயை நான் அறியவில்லை. அதை நான் அறிந்து கொண்டபின் அதை யாரும் காணமுடியாது. ஏனெனில் அதை யாரும் காணவியலாது.

கண்ணால் காண்பதெல்லாம் மாயையே.” ஆன்மத்தீ மாயை அல்ல.

ஆகவே,என் மெய்க்குள் நான் இருந்து, இருந்து, தவமிருந்து,
மெய்த்தவமிருந்து உணர்ந்து கொண்டேனே.

நாம் அடையவேண்டிய நான்கு நிலைகள்:
1.
அறிவு; 2. உணர்வு; 3. நினைவு; 4. கருத்து

இருந்து, இருந்து என சிவவாக்கியர் சொன்னது ஆன்மத்தீயை கருத்தில் நிறுத்தி, நிறுத்தி, அளவிலாவின்பம் பெற்று, பரிபூரணமாம் இறையுடன் கலந்தேனே என்றுதான்.

ஞான வெட்டியான் 1500 – 24

ஞான வெட்டியான் 1500 – 24

###############################

பாயிரம்

24.அந்தமுள்ள குருவினடிக் கமலம் போற்றி

………யன்னைதந்தை யிருவருந்தா னனுபோ கிக்கத்

தந்திரமா யிரவுதனி லணையும் போது

………தாதுவிந்து நாதமது வெழுந்த போதில்

எந்தவுயிர் வேதமறை யறிந்த தாண்டே

………யிடும்பரெல்லா நீசரென்று தள்ளினார்கள்

வந்தவழி போனவழி யிரண்டுஞ் சொல்வேன்

………வகையறியா மாந்தர்களே யறிந்து கொள்வீர்.

 

வந்தவழி, போனவழி ஆகிய இரண்டையும், வகை(கூறுபாடு, வழிவகை, சாதியினம், வலிமை) அறியாத மாந்தர்களே, அழகுள்ள குருவின் திருவடித் தாமரைகளைப் போற்றி வணங்கிக் கூறுவேன்; அறிந்துகொள்ளுங்கள். அன்னை தந்தை இருவரும் இன்பநுகர்ச்சிக்காகத் (அனுபோகம்) தந்திரமாக இரவில் அணைந்தபோது உணர்வுப் பெருக்கால் விந்து எழுந்தபோதில் எந்த உயிர் வேதங்களை அறிந்தது ஆண்டே!; துயர் செய்யும் செருக்கர்(இடும்பர்)களெல்லாம் நீசன் எனத் தள்ளினார். வந்தவழி போனவழி யறிந்த நானோ நீசன்? அறியாத நீவிரல்லவோ நீசன்.