Tag Archives: விழுதுகளால் நிராகரிக்கப்படும் வேர்கள்

விழுதுகளால் நிராகரிக்கப்படும் வேர்கள்

தினகரன் 15-06-2015 – இது கோயில் காளை பதிவைப் பிரதி எடுத்தது.
TamilDailyNews_4139324426652
மதுரை: ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்பார்கள். கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து, நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்து, வாழ்க்கையில் உயர பக்கபலமாக நிற்கும் பெற்றோர், வயதான பின்னர், யாருடைய ஆதரவும் இல்லாமல் காப்பகங்களில் வாழ்க்கையை கழிக்கும் அவலம் நிலவுகிறது. இன்றைய இளைய சமுதாயம் வேர்களை மறக்கும் விழுதுகளாக உள்ளனர். இதனால், ஊர்தோறும் முதியோர் காப்பகங்கள் உருவாகி வருகின்றன.