Tag Archives: வீரபுத்திரர்

பிரபுலிங்க லீலை – 2.40

வீரபுத்திரர் வருதல்
**********************
2.40 செருக்கொ டுஞ்சிவ நிந்தைசெய் வாய்க்கிலை தீர்வு
விரிக்கி னென் றுமுன் சிறுவிதி தலையற வெட்டி
எரிக்கு நல்கிநிந் தனைசெயா மறிமுகம் இயைத்துத்
தருக்கி நின்றவவ் வீரன்வந் தொருபுடை சார்ந்தான்.

செருக்கொடும் – ஆணவத்தோடும்.
தீர்வு இலை – கழுவாய் இல்லை.
சிறுவிதி – தக்கன்.
மறிமுகம் – ஆட்டுமுகத்தை.
இயைத்து – பொருத்தி.
தருக்கிநின்ற – மகிழ்ந்து நின்ற.
ஒரு புடை – ஒரு பக்கம்.

இறைவனை இகழ்ந்தமைக்கும் மேலும் இகழாமல் இருக்கும் பொருட்டும் தக்கன் தலையை வெட்டி ஆட்டு முகத்தை அமைத்த வீரபுத்திரர் வந்து இறைவனின் ஒரு பக்கம் நின்றான்.