Tag Archives: Add new tag

பஞ்சபட்சி சாற்றிறம்-காப்பு – 1

காப்பு
——-
1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதைகா வியப்பொருளே காப்பு.

உன்னி = தியானித்து, கவனத்துடன்
பன்னி = பண்ணி = அமைத்து
வன்னி = வன்னி மரம், நெருப்பு = குண்டலிப் பாதையாம் நெருப்பாறு

நற்சேத்திரத்தை வைத்துத்தான் (புள்,பறவை) பட்சி நிணயித்தல் வேண்டும். அது தெரியாதபோது: வந்தவன் உரைக்கும் முதல் எழுத்தைக்கொண்டு, அதை அமைத்துப் பறவையாய் உருவகப்படுத்தி அக்கினி திசையாம் தென்கிழக்கில் உதிக்கும் பட்சிகளின் உண்மையை உரைக்க இக்கலை கதையெனினும் காவியமெனினும் அதனுள்ளிருக்கும் மெய்ப்பொருளே காப்பு.

(யோக விளக்கம்):
ஒருவனாகிய ஆடவல்லான் உரைத்த முதலெழுத்தாம் குத்தெழுத்தைக் கவனமுடன் தியானித்து (உன்னி), அதை ஆன்ம பட்சியாக அமைத்துக் (பன்னி) குண்டலியாம் அங்கியில் உதிக்கும் பட்சியை (சரத்தை) உள் மெய்யில் (உண்மை) ஒலிக்க (உரைக்க) உதவும் கதைகாவியப் பொருளே காப்பாம்.

ஞானவெட்டியான்